சரத்குமார் எடுத்த சர்வே.. ரிசல்ட்டில் திடுக் முடிவு.. அப்போ ராதிகா? விருதுநகரில் சித்திக்கு சிக்கல்
விருதுநகர்: விருதுநகரின் பல்ஸை தெரிந்ததால் சரத்குமார் டென்சனாக இருக்கிறாராம். அங்கே களநிலவரம் எப்படி இருக்கும் என்று தெரிந்ததால் சரத்குமார் கொஞ்சம் அப்செட்டாகி இருக்கிறாராம்.
விருதுநகர் தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக மாறி உள்ளது. விருதுநகர் தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. மானிக்தாக்கூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய்காந்த் மகன் விஜய்பிரபாகரன், பாஜகவில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நிலையில் ஒரே வாரத்தில் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
விஜயகாந்த்: தொடக்கத்தில் விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சீன்லயே இல்லை. ஆனால் இப்போது அவர் பிரச்சாரம் செய்யும் விதம் கவனம் ஈர்த்து உள்ளது. ஏனென்றால் அவர் வீடு வீடாக செல்கிறார். வேட்பாளர்கள் வாகனங்களில் செல்வதும், கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக பிரச்சாரம் செய்வதுமே பொதுவாக வழக்கம். ஆனால் இங்கே விஜய பிரபாகரன் நேரடியாக வீடுகளுக்கே செல்கிறார். விருதுநகரில் தேமுதிக விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்யும் விதம் கவனம் ஈர்த்து உள்ளது. நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று அவர் வீடு வீடாக செய்யும் பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
அவரின் இந்த செயல் கொஞ்சம் சாதகமான சூழ்நிலையை அங்கே ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் போலவே அவர் கொஞ்சம் மக்களுடன் கனெக்ட் ஆகிறார்.
ராதிகாவிற்கான வாய்ப்பு எப்படி: சமீபத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார்.
கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக ஆய்வு: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வி.ஐ.பி. தொகுதிகளில் இதுவும் ஒன்று. விருதுநகரில் யாருக்கு வெற்றி என்பதை திமுகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. இந்த நிலையில், சரத்குமார் தனியார் ஏஜென்சி மூலம் விருதுநகரில் ஒரு சர்வே எடுத்து பார்த்துள்ளாராம். அதில், ராதிகாவுக்கு மூன்றாவது இடம் தான் என சொல்லப் பட்டுள்ளதை அறிந்து அப்-செட்டாகி இருக்கிறாராம். இது குறித்து ராதிகா வுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
வெற்றி பெறாததற்கும், மூன்றாம் இடத்துக்கு செல்வதற்கும் என்ன காரணம் ? இதனை தடுத்து வெற்றி பெற என்ன வழி என்பதற்குமான வழிகள் குறித்து அந்த சர்வே டீமிடம் விவாதித்துள்ளனர். அவர்களுக்கும் அது குறித்து கான்ஃபிடன்சியல் ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளனர். அதற்கேற்ப, தங்களின் தேர்தல் பணிகளையும் வியூகங்களையும் மாற்றி அமைத்துள்ளனராம். குறிப்பாக, எந்த பகுதிகளில் பாஜகவுக்கு வீக் ? வேட்பாளரான ராதிகாவுக்கு எந்த பகுதிகளில் வாக்குகள் விழாமல் போகிறது ? அதற்கான காரணங்கள் என்ன ? என்பதெல்லாம் சொல்லப்பட்டிருப்பதால் அதனை சரி செய்யும் விதத்தில் சரத்குமார் களப்பணியை மாற்றியமைத்து வருகிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications