ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்தால் கணவன் - மனைவியை சேர்த்துவிட்ட எடப்பாடி! ராஜேந்திர பாலாஜி வினோதம்
விருதுநகர்: ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகரில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், பஸ் மினி பஸ்ஸுல பெண்கள் மட்டும் போய்ட்டு இருந்தாங்கல்ல! இப்போ ஆண்களும் குடும்பத்தோட போகலாம்! ஆணும் போகலாம், பெண்ணும் போகலாம்.

ஏன் பிரிச்சிவிட்டீங்க (ஒருமையில் திமுக அரசை கேட்கிறார்). ஒன்னா இருந்த குடும்பத்தை திமுக பிரிச்சி விட்டுடிச்சி. என் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துவிடுறாரு! புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தே பஸ்ஸுல போகலாம். சிவகாசி பழனியாண்டவர் தியேட்டரில் படம் பார்க்க போகணுமா? உன் மனைவியை கூட்டிட்டு போ, இல்லாட்டி காதலியை கூட்டிட்டு போ! இருவரும் சேர்ந்தே ஓசில போங்க!
சினிமா டிக்கெட் மட்டும் எடுத்துக்கோங்க போதும். இலவச பஸ் பயணத்தை கொடுப்பது யாரு, எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி! ஏழை மக்களின் மனசு எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியும். இல்லாதவர்களுக்கு எதை செய்தால் பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.
எதை செய்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள், என்ன செய்தால் அவர்களின் துன்பம் போகும். பெண்களுக்கு திமுக கொடுத்திருக்கும் ஓட்டை பஸ்ஸுலாம் வராது. அதிமுக ஆட்சியில் நல்ல புதிய பேருந்துகள் வரும்.
சிலுவத்தூரில் இருப்போர் நேராக இலவச பஸ்ஸில் சிவகாசி வரலாம், பட்டாசு வாங்கலாம், சரக்கு வாங்கலாம். எல்லாமே ஃப்ரீ! ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டம், அது எம்ஜிஆர் போட்ட திட்டம், எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற போகிற திட்டம் என பேசினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு போதிய வரவேற்பு இருக்கிறது. சிறு தொழில்களை செய்யும் பெண்களுக்கு இந்த இலவச பேருந்து பயணத்தால் குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படுகிறது. எனவே இதை ஆண்களுக்கும் கொண்டு வர வேண்டும் என கடந்த 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது கனிமொழியிடம் பலர் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 17-ஆம் தேதி நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவின் போது எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் அதில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 2000, ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், 125 நாள் வேலை திட்டம் 150 ஆக உயர்வு, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என 5 வாக்குறுதிகளை அளித்தார்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் கூறுகையில், "பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கப்பட்டதற்கான காரணம், பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கக் கூடியவர்களாக வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது, பேருந்து செலவுக்கு பயந்து வெளியே செல்லாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஆண்களுக்கு ஏன் இலவச பேருந்து என்பது குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணம் கொடுத்து கணவன் மனைவியையும் காதலன் காதலியையும் திமுக அரசு பிரித்து வைத்துவிட்டதாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகியுள்ளது. பெண்களுக்கு இலவச பயணத்தால் எந்த குடும்பமும் பிரியவில்லையே. ஆணும் பெண்ணும் பேருந்தில் ஒன்றாக பயணிக்கலாம். அப்போது ஆண் மட்டும் டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு டிக்கெட்டுக்கு கட்டணம் கிடையாது. இதுதான் இத்தனை ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
எனவே அரசின் திட்டமே தெரியாமல் ஒரு முன்னாள் அமைச்சர் இப்படி பேசுவதா என திமுக ஐடி விங் டிரோல் செய்கிறார்கள். அது போல் அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என சொன்ன போது அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. அதிமுகவும் கண்டித்தது. ஆனால் இன்று அதே வார்த்தையை ராஜேந்திர பாலாஜியும் பயன்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விடியல் பயணத்தை பயன்படுத்தும் பெண்கள்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications