தவெகவில் வீணாகப் போன அதிமுக மாஜிகள்.. நாளைக்கு விஜய்க்கும் ‘அது’ நடக்கும்! ராஜேந்திர பாலாஜி சுளீர்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் வீணாகிக்கொண்டிருகிறார்கள் எனவும், தங்களை வளர்த்து விட்ட அதிமுகவை தூக்கி எறிந்தவர்களுக்கு தவெகவை தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும். எனவே தவெக விழிப்போடு இருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி முஸ்லிம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடத்திணை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட, அவர்களைப் பற்றிய கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

பாலும் பழமும், பாசமலர், பாகப்பிரிவினை போன்ற திரைப்படங்களை பார்த்தால் அழுகை வரும், உற்சாகமூட்டக்கூடிய நடிகரான விஜய் படத்தை பார்த்து (ஜனநாயகன்) அழ வேண்டிய அவசியமில்லை. விஜய், அஜித் திரைப்படங்கள் சண்டை காட்சிகளுடன் உற்சாகமூட்டக்கூடிய திரைப்படங்களாகவே இருக்கும்.

Rajendra Balaji AIADMK TVK Vijay

கேடி ராஜேந்திர பாலாஜி

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகி உள்ளார். போராட்டத்தில், பிரச்சனைகள் வேண்டாம், மாணவர்கள் சமுதாயம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்று தான் பார்க்க வேண்டும். போராட்டத்தின் நியாயம் கருதி மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அடிபணிந்ததாக சொல்லக் கூடாது. அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

லாக்கப் மரணம்

பெரும்பான்மை மக்களின் நிலைப்பாட்டையே எந்த அரசும் நடைமுறைப்படுத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். நடப்பது அனைத்தும் நியாயமாகத் தெரிகிறது. லாக்கப் மரணம் குறித்து அன்றைக்கு பேசியது போல் பேசவில்லை என்றாலும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். லாக் அப் மரணம் குறித்து நியாயமான நடவடிக்கையை தவெக அரசும் முதல்வரும் எடுக்க வேண்டும்.

தவெக ஆட்சி

அதிமுகவில் இருந்து சென்றவர்கள் யாரும் விஜய் முதல்வராக வேண்டும் என விஜய்க்காக தேர்தல் பணியாற்ற வில்லை. வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்த நிலையில் அவர்களது வெற்றியில் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் பங்குபெற்று ஏற்கனவே தவெகவில் உண்மையாக உழைத்தவர்களை ஓரங்கட்டி பதவிக்கு வர நினைப்பது சந்தர்பவாதம். உங்களை உருவாக்கி வளர்த்து விட்ட இயக்கம் அதிமுக.

விஜய்

அதிமுகவில் 10 ஆண்டுகள் அமைச்சர், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு தங்களை வளர்ந்துவிட்ட அதிமுகவை தூக்கி எறிந்துவிட்டு செல்பவர்கள் தவெகவை தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும் . இதை புரிந்து தவெக நிர்வாகிகளும், தவெக தலைவர் விஜயும் நடந்து கொண்டால் சரிதான். தற்போது தவெகவிற்கு வந்தவர்களை வைத்து கட்சி நடத்தி வெற்றி பெறவில்லை. தவெக வெற்றி பெற்ற பின்னர்தான் அங்கு செல்கிறார்கள். எனவே தவெக விழிப்பாக இருக்க வேண்டும். அதிமுகவின் வேர் வலுவாக உள்ளது
வேர் இருக்கும் வரை மரம் செழித்து வளரும்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில். அதிமுக என்ற இயக்கம் வலுவாக இருக்கிறது, பலமான தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று தங்களை எதிர்ப்பவர்களையும் எதிர் குரல் எழுப்புவார்களையும் எடப்பாடி பழனிச்சாமியும் அனுசரித்துச் செல்கிறார். அதையும் மீறி வெளியே சென்றவர்கள் வீணாக போவார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். தமிழக மக்களுக்கும் தெரியும். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் வீணாகிக் கொண்டிருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனி முத்திரை பதிக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+