ஹெல்மெட் போடல.. வண்டில நம்பர் பிளேட்டே இல்ல.. ராதிகாவை பின்னால் அமர வைத்து பைக்கில் பறந்த சரத்குமார்
விருதுநகர்: சிவகாசியில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், ஹெல்மெட் அணியாமல் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார் சரத்குமார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக ராதிகா சரத்குமார் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணி சார்பில் காங்கிர வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராதிகா சரத்குமார். அந்த வகையில் நேற்று ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்து பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறக்காம தாமரைக்கு ஓட்டு போடுங்க என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டனர்.
வாக்கு சேகரிக்க, தனது மனைவி ராதிகா சரத்குமாரை பின்னால் அமர வைத்து பைக்கில் சென்ற சரத்குமார் ஹெல்மெட் அணியாமல் சாலையில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் சென்ற பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. வேட்பாளர் ராதிகா சரத்குமார் பயணித்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications