விருதுநகர் தொகுதி சீமான் வேட்பாளர்: 'தமிழ்' படிக்க தெரியாத "நா...ம் தமிழர்" - சுப.வீ. கிண்டல்!
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கவுசிக் தமக்கு தமிழ் படிக்க தெரியாது என கூறி தேர்தல் அலுவலரின் உதவியை நாடிய சம்பவம் விவாதப் பொருளாகி இருக்கிறது.
சீமான் நடத்தி வரும் கட்சியின் பெயர் நாம் தமிழர். தமிழ் மொழி, தமிழர் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டதுதான் நாம் தமிழர் கட்சி. சீமான் மேடைகளில் நரம்பு முறுக்கேற்றி ஆவேசமாக பேசும் பாணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. திரைப்பட இயக்குநர், நடிகராக இருந்ததால் சீமானின் எதுகை மோனை பேச்சும் எளிதில் கவர்கிற வசனங்களும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போடும்.

சீமான் மேடைகளில் பேசுவதை அப்படியே "பின்பற்றுவதை" கொள்கையாகவே தம்பிமார்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு முன்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்படி பேசினார். மதிமுகவினரும் அதே பாணியை பின்பற்றினர். ஆனால் மதிமுகவின் இந்த வியூகம் எடுபடாமல் போனது.
தற்போது லோக்சபா தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பலரும் டாக்டர்கள். இவர்களில் ஒருவர்தான் விருதுநகர் கவுசிக்.

நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் கவுசிக் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின் போது தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர் வாசிக்க வேண்டும். ஆனால் டாக்டர் கவுசிக்கோ தமக்கு தமிழில் பேசத் தெரியும். தமிழில் படிக்கத் தெரியாது என கூறியிருக்கிறார். இது நாம் தமிழர் கட்சியினரை மட்டுமல்ல.. தேர்தல் அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதனையடுத்து தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க அதனை அப்படியே டாக்டர் கவுசிக் வாக்க உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாதா? என்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், "விருதுநகர் தொகுதியின், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக், நேற்று மனுத்தாக்கல் செய்ய வந்த போது, உறுதிமொழியைப் படிக்கச் சொல்லியுள்ளனர். அவர் தனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று சொல்லி விட்டாராம். நா........ம் தமிழர்! ஆனால் தமிழ் மட்டும் தெரியாது" என கிண்டலடித்துள்ளார்.
-
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications