மகளிர் உரிமைத்தொகையை விடுங்க.. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த திடுக் சம்பவம்.. போச்சு
விருதுநகர்: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மனு அளிப்பது வேஸ்ட் எனக்கூறி மனுவை வீசி எறிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கொங்கன்குளம் கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார் . இந்த முகாமில் அரசு சார்பில் செயல்படும் 13 அரசு துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பயனாளர்களுக்கு செய்து வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான சேவைகளையும் ஒரே இடத்தில் அரசு அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ், பட்டா உள்ளிட்டவைகளை வழங்கினார் மேலும் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் அங்கு குவிந்தனர், இந்த நிலையில் அங்கிருந்த பெண் ஒருவர் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் நூற்றுக்கணக்கான மனு வழங்கி உள்ளேன் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று கோபம் அடைந்தார்.
தங்கள் பகுதிக்கு சமுதாயக்கூடம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை எனக் கூறி அங்கிருந்து பொதுமக்கள் இடையே இங்கு மனு அளிப்பது வேஸ்ட் என கூறி மனுக்களை வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முகாமின் கீழ் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய கடைசி வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. மகளிர் உரிமைத் தொகைக்குத் தகுதி இருந்தும் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் விண்ணப்பத்தின் விலையை நீங்கள் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications