துயரம் பருப்பான துவரம் பருப்பு..உருள வைக்குது உருட்டு உளுந்து! பட்ஜெட்டை பதம் பார்க்கும் விலை உயர்வு
விருதுநகர்: அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்து பருப்பு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த விலை உயர்வு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்
பொதுமக்கள் அன்றாடம் தங்கள் உணவில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்கின்றனர். மழைக் காலம், கோடைக் காலம் ஆகியவற்றை பொறுத்து காய்கறிகள் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். அதனை வைத்து விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
மழைக் காலங்களில் தக்காளி விளைச்சல் மிகக் குறைவாக இருக்கும் அதனால் விலையானது அதிகரித்து காணப்படும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தக்காளி விலை ₹100யை கூட தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தற்போது தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் 8 கிலோ 100 ரூபாய்க்கு கூட விற்பனையாகிறது.

இந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால் துவரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு உள்ளிட்டவை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய லயன் துவரம் பருப்பு 100 கிலோவுக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது 100 கிலோ 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதே போல நாட்டு உருட்டு உளுந்தம் பருப்பு ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து தற்போது 10 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல பொதுமக்கள் பயன்படுத்தும் கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில், சர்க்கரை, மைதா, ரவை, கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலையும் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. ஆறுதல் அளிக்கும் விதமாக பாசிப்பருப்பு 100 கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்து 9300 முதல் 9,450 வரை விற்கப்படுகிறது.
மேலும் பட்டாணி 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்த நான்காயிரத்து அறநூறு ரூபாய்க்கும், பாசி பயறு 6,900க்கும் விற்பனையாகிறது. மல்லி 3600க்கும், நாட்டு மல்லி 4300க்கும், வத்தல் 8000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் புண்ணாக்கு 100 கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. தற்போது 1800 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இந்த விலை மாற்றம் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications