தென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Recommended Video
ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 ஆம் நாள் நாளில், முதல் சனிக்கிழமை என்பதனால் அதிகாலை சீனிவாச பெருமளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று. அதை தொடர்ந்து அதிகாலை 5.30 காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள் தானிய பொருள்கள் போன்றவற்றை கருணை கண்களுடன் இருக்கும் சீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், அன்னதான உணவு வசதிகள், கழிப்பிட வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துகளை தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலம் அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications