மரணமடைந்த ஆசிரியை.. கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுத மாணவிகள்
Recommended Video

ஸ்ரீவில்லிப்புத்தூர்: இப்படி ஒரு துக்க வீட்டினை தமிழகம் இதற்கு முன்பு பார்த்திருக்காது. தங்கள் ஆசிரியை இறந்துவிட்டதை கேள்விப்பட்ட பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுததையும் கண்டு அனைவரையும் கண்கலங்கி நின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பகுதி வத்திராயிருப்பு. இங்கு வசித்து வந்தவர் பிரேமசுந்தரி. இவர் கோட்டையூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் டீச்சராக பணியாற்றி வந்துள்ளார்.

பள்ளி மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்களோடு அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவராம் பிரேமசுந்தரி டீச்சர். அதனால் பிள்ளைகளுக்கு இவர் மேல் தனி பாசமே எப்போதும் உண்டாம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீச்சருக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாத நிலையில் இன்று உயிரிழந்தார்.
டீச்சர் மறைந்த விஷயம் பள்ளி மாணவ, மாணவிகளின் காதில் எட்டியது... அதிர்ச்சியில் உறைந்த மாணவிகள், வகுப்பறையிலேயே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர். பள்ளியே ஒன்றுகூடி டீச்சர் வீட்டுக்கு திரண்டு வந்தது.
வீட்டினுள் கிடத்தப்பட்டிருந்த டீச்சரின் உடலை கண்டு மாணவ, மாணவிகள் கதறினார்கள். பிறகு வீட்டின் முன் தரையில் அமர்ந்து ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர். ஒரு பக்கம் மாணவர்கள், இன்னொரு பக்கம் மாணவிகள் என.. அந்த துக்க வீட்டில் உறவினர்களைவிட மாணவிகளே அதிகமாக கூடியிருந்தனர்.
தங்களுக்கு டீச்சருடன் ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவங்களையும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லி கொண்டு அழுதது அனைவரின் மனசையும் உருக்குவதாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு எந்த ஆறுதலையும் யாராலும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications