திருடர்களுக்கு வந்த திடீர் பயம்.. கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர்கள் கொள்ளை!
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 134 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் சிசிடிவியில் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் எலெக்ட்ரிக் கடையின் மேற்கூரையை பிரித்து கம்ப்யூட்டர் , சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான மணி எலக்ட்ரிகல் கடையில் மேற் கூரையை துளையிட்டு எல்.இ.டி டிவி , கம்ப்யூட்டர் , சிசிடிவி கேமரா, கார்ட் டிஸ்க், பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் 134 பவுண் நகை கொள்ளையடிக்கப்படிக் கப்பட்ட சம்பவத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கிருஷ்ணன் கோயில் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளை போன வீட்டிற்கு அருகே உள்ள எலக்ட்ரீர் கடையில் இருந்த சிசிடிவி யில் கொள்ளையர்கள் புகைப்படம் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் அதே கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.
தடயத்தை அழிக்க கடையில் இருந்த சிசிடிவி கேமரா, கம்யூட்டனர், டிவி, பணம் உள்ளிட்டவற்றை அதே கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு டிவிஎஸ் ஷோரூம் கடையின் மேற்கூரையும் கொள்ளையர்கள் துளையியிட்டுள்ளனர்.
ஆனால் அங்கு புதிதாக டிவிஎஸ் பைக் இருந்துள்ளது. அந்த பைக்கை திறக்க முடியாததால் கொள்ளையர்கள் அந்தக் கடையில் இருந்து எந்தக் பொருளையும் எடுத்து செல்ல முடியவில்லை. அப்படியே விற்று சென்று விட்டனர்.
தொடர்ந்து கடந்த 10 நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூரில் திருட்டுச் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உடனடியாக காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமென பொதுமக்களின் எதிர்பார்க்கின்றனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications