விருதுநகரில் டப்ளிங்கில் கவிழ்த்த அரசியல்வாதி.. தர்மபுரியில் லட்சம் லட்சமாய் பணம்! யாரந்த பட்டுராஜன்
விருதுநகர்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? தினுசு தினுசாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் சிக்குபவர்களும் உடனுக்குடன் கைதாகி வருகிறார்கள்.. நேற்று ஒரே நாளில், டப்ளிங் என்று சொல்லக்கூடிய பணத்தை இரட்டிப்பாக்கும் மோசடி சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. இதில் மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் சிக்கி கைதாகி உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது மண்ணேரி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் முத்துலட்சுமி.. நேற்றைய தினம் முத்துலட்சுமியும், அந்த பகுதியிலுள்ள சில பெண்களும் இணைந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வந்து புகார் தந்திருந்தனர்.

அந்த புகார் மனுவில், "நாங்கள் மண்ணேரி பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 2024ஆம் வருடம் எங்கள் பகுதியை சேர்ந்த இரண்டு பேர், எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
லட்சக்கணக்கில் மோசடி
தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வங்கியில் கடன் பெற்று, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாகவும் எங்களிடம் ஆசைவார்த்தை சொன்னார்கள்.
அதுமட்டுமல்ல, வங்கியில் வாங்கிய கடனை அவர்களின் நிறுவனம் சார்பாக செலுத்தி விடுவதாகவும், பெண்களுக்கு பல சிறப்பு சலுகைகள் உள்ளதாகவும் கூறினார்கள்.
அவைகளை எல்லாம் உண்மை என்று நாங்கள் 35 பேரும் நம்பினோம்.. வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கி, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். ஆனால், பல மாதங்கள் கடந்துவிட்டது. இதுவரை அவர்கள் சொன்னபடி எங்களுக்கு பணம் வழங்கவில்லை.
தர்மபுரியில் டப்ளிங் பணம்
வங்கியில் நாங்கள் வாங்கியிருந்த கடனையும் செலுத்த முடியவில்லை.. அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கி நிர்வாகம், எங்களது தனிப்பட்ட வங்கி கணக்கை முடக்கிவிட்டது.. அத்துடன் கடன் தொகையை செலுத்தும்படி நோட்டீஸையும் அனுப்பியிருக்கிறது.
இதனால், வங்கியில் உள்ள இதர பணத்தையும் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் மோசடி செய்தவர்களையும், அவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்ட தர்மபுரியை சேர்ந்தவரையும் பிடித்து, எங்களது பணம் ரூ.60 லட்சத்தை மீட்டு தரவேண்டும்" என்று தங்களது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு இரட்டிப்பு பணம் மோசடி நடந்துள்ளது.. இந்த மோசடியில் சிக்கியிருப்பவர் அதிமுக பிரபலம் 52 வயது பட்டுராஜன் என்பவராவார்.

விருதுநகர் புள்ளி
பட்டுராஜன் மற்றும் அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) உள்ளிட்டவர்கள் இணைந்து டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.. இதில், இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை சொல்லி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாயை பெற்று மோசடியும் செய்து வந்துள்ளனர்.
இதனால் பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன், மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டது. அப்போது 3 பேருமே, பல பேரிடம், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, 3 பேர் மீதும் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.. இதில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதால் அவர்களையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.
பட்டுராஜன் மிகப்பெரிய அரசியல்வாதி
இந்த மோசடியில் மிக முக்கிய புள்ளி பட்டுராஜன்தான்.. இவர் ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகி ஆவார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரும் ஆவார்.
அதுமட்டுமல்ல, சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்.. சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர்.. செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர்.. இப்படி ஏகப்பட்ட பதவிகளை வகித்து வருகிறார் பட்டுராஜன். விருதுநகரின் மிகப்பெரிய அதிமுக புள்ளி கைது செய்யப்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் பரபரப்பை தந்து வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications