விஜய்யிடம் பூத் கட்டமைப்பே இல்ல.. 234 தொகுதியில் வேட்பாளர்கள் இருக்காங்களா.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
விருதுநகர்: தமிழ்நாட்டில் பூத் கமிட்டி அமைப்பே இல்லாத சிலர் சித்து விளையாட்டு காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தவெகவிடம் 234 தொகுதிகளிலும் நிறுத்துவதற்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பிய ராஜேந்திர பாலாஜி, தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை அதிமுக அட்டாக் செய்ய தொடங்கி இருக்கிறது. கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் விமர்சித்து வந்தாலும், எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்கள் வரை அமைதி காத்து வந்தார். ஆனால் கடந்த வாரத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும் இறங்கி அடித்தார்.

விஜய்யின் பெயரை சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், செல்லூர் ராஜு நேரடியாகவே அட்டாக் செய்தார். தற்போது ராஜேந்திர பாலாஜியும் விஜய்யை சாட தொடங்கியுள்ளார். விருதுநகரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், 2026ஆம் ஆண்டு அதிமுகவுக்கானது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தேர்தல் களத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில் தான் போட்டி. நம்முடன் வருபவர்கள் வரட்டும்.. இருப்பவர்களை வைத்துக் கொண்டு வெல்லும் வல்லமை எடப்பாடி பழனிசாமி இருக்கிறது. அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து வெற்றியை நோக்கி நமது கூட்டணி நகர்ந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி இல்லயென்றால் அதிமுகவை எங்கேயோ கொண்டு போய் அடகு வைத்திருப்பார்கள். அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் நாங்கள் தான் திமுகவை தோற்கடிக்க கூடியவர்கள். நாங்கள் ஆதரித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும்.
நாங்கள்தான் புதிய வரலாறு என்று கூறுபவர்களால் முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பலம் உள்ளதா? பூத் கமிட்டி கட்டமைப்பே இல்லாத சிலர் சித்து விளையாட்டு காட்டி வருகிறார்கள். தேர்தல் களத்தில் போட்டியென்பது அதிமுக மற்றும் திமுக இடையே தான். சினிமா ஸ்டார்கள் யார் வந்தாலும் கூட்டம் கூடும். அதெல்லாம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. விஜய்யின் ஆசை நிராசையாக போகும். நிச்சயமாக களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும் என்று விமர்சித்துள்ளார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு!












Click it and Unblock the Notifications