பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி
3 வயது குழந்தையை 2 சிறுவர்கள் கொலை செய்துள்ளனர்
விருதுநகர்: 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கின்றனர் 2 சிறுவர்கள்... இந்த கொடூரம் சிவகாசியில் நடந்துள்ளது.
சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன் - கவியரசி.. இந்த தம்பதிக்கு 10 வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் இருந்தனர்.
பார்த்திபன் ஒரு டிரைவர்.. கவியரசி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் வேலை பார்த்து வருகிறார்..

விளையாட்டு
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அல்போன்சா... இவர் வீடு கட்டுவதற்காக வீட்டிற்கு பின்பக்கம் மணல் இறக்கி வைத்துள்ளார்... அந்த மணலில் பார்த்திபனின் மகன் தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.. இதை பார்த்த அல்போன்சா சத்தம் போட்டுள்ளார்... இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அல்போன்சாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அல்போன்சா
இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இரு குடும்பத்தினருக்கும் சண்டையாக மாறியது.. இதில் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன்குமார் 13 வயது, அஜய் 11 வயது, இருவரும் சேர்ந்து பார்த்திபனின் மகன் தீனதயாளனை கடைக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர்... இதற்கு பிறகுதான், தீனதயாளனை காணோம் என்று அவரது பார்த்திபனும், அவரது மனைவியும் தேட ஆரம்பித்தனர்..

விசாரணை
எங்குமே குழந்தை கிடைக்கவில்லை.. இதனால், வேறு வழியில்லாமல், தம்பதி இருவரும் சிவகாசி ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசார் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர்... அப்போதுதான், பிரவீன் குமார், அஜய் இரு சிறுவர்களும், 4 வயது குழந்தை தீனதயாளனை விஸ்வநத்தம் பகுதியில் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்...

சடலம்
இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அந்த கிணற்றுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போது குழந்தையின் உடல் சடலமாக மிதந்து கொண்டிருந்தது.. பின்னர், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். 2 சிறுவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பழிவாங்குவதற்காக மூன்றரை வயது குழந்தையை இரு சிறுவர்கள் ஒரு கொலையை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications