என்ன ஆணவம்! ஆண்டாள் கோயில் ஊழியரை எட்டி உதைக்கும் அதிகாரி.. பரபர வீடியோ! பொங்கி எழும் நெட்டிசன்கள்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும் 108 வைணவ தலங்களில் மிக முக்கியத் தலமாகக் கருதப்படுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்.
மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்
ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காகச் செயல் அலுவலர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மல்லபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோவிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

கடுமையான பணிச்சுமை
இருப்பினும், இவருக்கு ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருவதாகவும் இதனால் ஏற்கனவே உடல் குறைபாடுள்ள தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாகச் செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் கூட வேண்டுமென்றே தனக்கு இரவு பணி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் அதிகாரிகள் பணியாட்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்குப் பயந்துகண்டு வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும், நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எட்டி உதைக்கும் வீடியோ
இந்த சூழ்நிலையில் கோவில் கணக்கர் சுப்பையா என்பவர் பணியாட்கள் இருக்கும்போது கர்ணனை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. செயல் அலுவலர் பணியாளர்கள் முன்னிலையில் அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் பொழுது அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

வைரல் வீடியோ
கோவில் கணக்கராக பணியாற்றி வரும் சுப்பையா அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அவமரியாதையாகப் பேசுவதாகவும், நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது அவர் கோயில் ஊழியர் கர்ணனை எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் சாடி வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications