விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லீவு கேட்டதுக்கு ஹோம்வொர்கை முடி தம்பினு சொன்னாரே.. அந்த விருதுநகர் கலெக்டர் ட்வீட்டா இது!

Google Oneindia Tamil News

விருதுநகர்: பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய நிகழ்ச்சியான Coffee With Collector-ஐ விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

சமூகவலைதளம் என்ற ஒன்று வந்தவுடன் மாநில முதல்வர் முதல் வெளிநாட்டு அதிபர்களுடன் வரை பேசும் அளவுக்கு வந்துவிட்டது. அப்போதெல்லாம் ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு கொடியேற்றவோ இல்லை வேறு ஏதேனும் விழாக்களுக்கு மட்டுமே வருகை தருவர்.

அத்துடன் அவரை காண வேண்டுமானால் ஆட்சியரகத்தில் சென்று காணலாம். ஆனால் இப்போது மாவட்ட நிர்வாகத்துடன் நம்மை பாலமாக இணைத்து வைத்துள்ளது சமூகவலைதளம். அதில் முக்கியமானது ட்விட்டர்.

தன்வந்திரி பீடத்தில் அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க 100008 வடை மாலை தயார் தன்வந்திரி பீடத்தில் அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க 100008 வடை மாலை தயார்

விமர்சிக்கலாம்

விமர்சிக்கலாம்

இந்த ட்விட்டர் மூலம் யார் யாரையும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம், சந்தேகம் எழுப்பலாம், என்ற நிலை வந்துவிட்டது. அது போல் தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்களில் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார் விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் திருகார்த்திகை தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதை விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டிக்கு டேக் செய்திருந்தார். இந்த டிவீட்டை பார்த்த ஆட்சியர், பெற்றோரை அழைத்து கொண்டு என்னை வந்து பார்க்கவும என பதிலளித்திருந்தார்.

ஆள் அட்ரஸே இல்லை

ஆள் அட்ரஸே இல்லை

அவ்வளவுதான் உங்கள் லீவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என அந்த மாணவர் மனதில் நினைத்தாரோ என்னவோ அதன் பிறகு ஆள் அட்ரஸே இல்லை. அது போல் இன்னொரு மாணவன், கனமழையால் கடந்த நவம்பர் 26ஆம் தேதி மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் மேகநாத் ரெட்டிக்கு "சார் விருதுநகர் மாவட்டத்துலயும் ஹெவி ரெயின் சார்" என போட்டிருந்தார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

உடனே மேகநாத் ரெட்டி, லீவு கிடைக்க வேண்டும் என உங்களது தொடர் பிரார்த்தனைக்கு நன்றி தம்பி. நம்முடைய மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடியுங்கள், அதை மறுநாள் ஆசிரியர் சரிபார்ப்பார். பாதுகாப்பாக இருங்கள் என பதில் தெரிவித்திருந்தார்.

பெற்றோர்

பெற்றோர்

என்னய்யா இது, லீவு கேட்டால் ஒன்னு பெற்றோரை கூட்டி வான்னு சொல்றாரு, இல்லாட்டி வீட்டுப் பாடம் எழுதுனு சொல்றாரே, நல்ல வேளை இவர் நமக்கு வாத்தியாராக வரவில்லை என மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறன்களை ஊக்கப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

15 மாணவ, மாணவியர்

15 மாணவ, மாணவியர்

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 15 மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிவாரம் ஒரு முறை அவர்களை அழைத்து அவர்களிடம் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது என அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Virudhunagar collector Meghanath Reddy arranges for Coffee with Collector program to bring out the skills from students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X