Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோலைவனமாகும் சங்கரலிங்கபுரம்.. சென்னை வாழ் சங்கை தேவாங்கர் சங்கத்தினர் மரக்கன்றுகள் நட்டு சாதனை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: வசிக்கும் கிராமத்தை சோலைவனமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்றி வருகின்றனர் ஒ. சங்கரலிங்கபுரம் கிராம தேவாங்கர் சமுதாய மக்கள். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்து சாதனை படைத்துள்ளனர்.

மரம் வளர்த்தால் மண் செழிக்கும் மழை வளம் பெருகும். இன்றைக்கு சாலை விரிவாக்கத்திற்காகவும் வீடுகள், கட்டிடங்களை கட்டவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. வேலைக்காகவும் படிப்பிற்காகவும் வெளியூர் சென்றவர்கள் தங்களின் பிறந்த ஊரை அவ்வப்போது நினைத்து பார்ப்பார்கள். நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ஒ. சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு சோலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Virudhunagar district village sankaralinkapuram to enhance green cover Solaivanam

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் பீர்க்கா சங்கரலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறமுள்ள அரசு புறம்போக்கு உபரி நீர் ஓடைப்பகுதிகளில் 16-09-2023 சனிக்கிழமை அன்று 700 மரக்கன்றுகளும் மியாவாக்கி முறையில் 2500 மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்த விழாவை சென்னை வாழ் சங்கை தேவாங்கர் சங்கத்தினர் முன்னின்று நடத்தினர்.

இவ்விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஏஆர்ஆர் சீனிவாசன் அவர்கள், தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சங்கரலிங்கபுரம் தேவாங்கர் மகாஜனசபை தலைவர், நான்கு நாட்டாண்மைகாரர்கள், ஊராட்சி பஞ்சாயத்து தலைவி, ஊர் பொதுமக்கள், மற்றும் கிராம பஞ்சாயத்து நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இந்த கிராமத்தில் கண்மாய்க்கரை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சமூக ஆர்வலர் கர்னல் எஸ். கந்தசாமி, (ஓய்வு) அவர்கள் முயற்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்களிப்புடன் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 650 மரக்கன்றுகள் நடப்பட்டு இதுநாள் வரை நல்ல முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேற்கண்ட விழாவிற்கு தேவையான சுமார் 500 மரக்கன்றுகள் ராம்கோ சிமெண்ட் நிறுவனம், ஆர்ஆர் நகர், விருதுநகர், சுமார் 800 மரக்கன்றுகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், விருதுநகர் கிளை, சுமார் 100 மரக்கன்றுகள் திரு அர்சுனன் சங்கர் நகர் திருநெல்வேலி ஆகியோர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல எண்ணத்தோடு ஒரு விதை விதைத்தால், நீரூற்றா விட்டாலும் விருட்சமாக வளரும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்றைக்கு விருதுநகர் மாவட்டம் ஒ. சங்கரலிங்கபுரம் கிராமத்தை சோலைவனமாக்க அந்த மக்கள் எடுத்துள்ள முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+