வியந்து நின்ற விருதுநகர்.. சிலிர்த்து போன சிவகாசி.. ரூ.6000 கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..மகிழ்ச்சி
விருதுநகர்: இன்று தீபாவளி பண்டிகை தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சிவகாசியில் ரூ.6000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனையாகியிருக்கின்றன.. இது, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வடக்குப்பகுதி கிராமங்கள் முழுவதுமே "கந்தக பூமி" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன... காரணம், இயல்பாகவே தனிமங்களால் வெப்பமான பகுதியாக இது கருதப்படுகிறது.

குட்டி ஜப்பான்: "இந்தியாவின் குட்டி ஜப்பான்" என்றழைக்கப்படும் சிவகாசி, பட்டாசு உற்பத்திக்கு பெயர்போனது.. இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்திற்கு மேல் சிவகாசியில் தயாராகின்றன. எனவே, நிரந்தர உரிமம் பெற்ற மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
அந்தவகையில், இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு தயாரிப்புகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தன.. 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன..
கவுண்டர்கள்: ஆனால், இந்த தீபாவளிக்கு வழக்கமாக இருப்பதை விட வாடிக்கையாளர் வருகை குறைவாக உள்ளதாகவும், கடைகளில் உள்ள கவுண்டர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதுமட்டுமல்ல, ஆன்லைன் ஷாப்பிங்கை பொதுமக்கள் நாடுவதால், மாத இறுதியில் தீபாவளி பண்டிகை நடைபெறுவதும் விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என்று பட்டாசு வியாபாரிகள் கூறியிருந்தார்கள்..
ஆன்லைன் விற்பனை: இதுபோக, சிவகாசியில் சொந்தமாக கடைகளை வைத்திருப்பது போல் நடித்து, ஆன்லைனில் பட்டாசுகளை விற்கும் மோசடியாளர்களுக்கு பெருகிவிட்டதால், கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை 20 விழுக்காடு சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.. எனவே, ஆன்லைனின் பட்டாசு விற்பதை முறைப்படுத்த அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சிவகாசியில் ரூ.6000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனையாகியிருக்கின்றன.. இது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகி உள்ளதாகவும், இப்போதுவரை 90 சதவிகித பட்டாசுகள், முற்றிலுமாக விற்பனையாகிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
சிறப்பு விற்பனை: கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் புதிய ரக பட்டாசுகள் நிறைய வந்துள்ளன.. இதனால் விபாரமும் அதற்கு ஏற்றார் போல் தான் நடந்துள்ளதாக தெரிகிறது. இத்தனைக்கும் இந்தமுறை வியாபாரம் கொஞ்சம் தாமதமாக தொடங்கினாலும், கனமழை பாதிப்பு இருந்தாலும், பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வடமாநிலங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கியதும் பட்டாசு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் நம்பிக்கை
குறிப்பாக கடந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்த நிலையில், இந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்று தீர்ந்துள்ளது. அந்தவகையில், பட்டாசுகள் வாங்கி ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு பட்டாசு விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications