மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. விருதுநகரில் சோகம்
விருதுநகர்: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தேவகி. இவர் கடந்த 17-ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேவகி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவகியின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியன நல்ல நிலையில் இருந்தன.
இதனால் அவரது உறுப்புகளை தானமாக அளித்தால் மற்றவர்கள் மறுவாழ்வு பெறுவர் என மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து உறுப்பு தானத்துக்கு கணவர் கிருஷ்ணகுமார் ஒப்புக் கொண்டார்.
5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, தேவகியின் உறுப்புகள் அகற்றப்பட்டு 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. அதன்படி ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டரில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications