விருதுநகர் லாட்ஜில்.. "ரப்பர் பேண்ட்டை" கழுத்தில் வைத்த நந்தினி.. ஃபுல் போதை வேற.. பக்கத்திலே காதலன்
விருதுநகர்: விருதுநகர் லாட்ஜில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் நிலைகுலைய வைத்துவருகிறது.. அப்படியென்ன நடந்தது? யாரந்த பெண் நந்தினி?
விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன்.. 27 வயதாகிறது.. திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வந்தார். நந்தினி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

டைவர்ஸ்: நந்தினிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடமிருந்து டைவர்ஸ் வாங்கிவிட்டார்.. நாளடைவில் நந்தினிக்கும், காசிக்கும் இடையேயான நட்பானது கள்ளக்காதலாக உருவானது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டிலிருக்கும் ஒரு லாட்ஜில் 2 பேரும் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்... அப்போது, திடீரென வீட்டிற்கு சென்ற காசி, தன்னுடைய அம்மாவிடம் நந்தினியுடனான பழக்கம் குறித்தும், தாங்கள் லாட்ஜில் தங்கியிருப்பது குறித்தும் சொன்னதாக தெரிகிறது.
லாட்ஜ்: பிறகு மீண்டும் லாட்ஜூக்கு வந்துள்ளார் காசி.. அன்றைய தினம் அதாவது கடந்த 14ம் தேதி இரவு லாட்ஜில் இறந்து கிடந்தார்.. அப்போது நந்தினி லாட்ஜில் இல்லை... இதையடுத்து, தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக விருதுநகர் கிழக்கு போலீசில் காசியின் அம்மா செல்வராணி புகார் செய்தார். போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, திருப்பூரிலிருந்த நந்தினியை கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.
அப்போதுதான் மொத்த உண்மையையும் நந்தினி போலீசில் சொல்லியிருக்கிறார்.. அதாவது, அவரது தாய்மாமனுடன் நந்தினிக்கு முதல் திருமணம் நடந்துள்ளது.. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், கணவர் நாளுக்கு நாள் மதுபோதைக்கு ஆளாகிவிட்டதால், அவரை பிரிந்துள்ளார் நந்தினி..
பியூட்டி பார்லர்: இதற்கு பிறகு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தபோதுதான், காசியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... அப்போதிருந்து 2 பேருமே பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. 4 நாட்களுக்கு முன்பும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியதுபோதுகூட நந்தினியும், காசியும் இருவருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்தார்களாம்
அப்போது, நந்தினியை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று காசி கட்டாயப்படுத்தினாராம்.. அப்போதுதான் இது தொடர்பாக 2 பேருக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஒருவரையொருவர் சரமாரியாக அடித்து கொண்டுள்ளனர்..
விசாரணை: ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நந்தினி, காசியின் கழுத்தை நெரித்ததுடன், தன்னிடமிருந்த ரப்பர் பேண்ட்டால், கழுத்தை இறுக்கியிருக்கிறார்.. இதில் காசி அங்கேயே மூச்சுதிணறி இறந்துள்ளார்.. அதற்கு பிறகு நந்தினி, திருப்பூர் தப்பி சென்றுவிட்டாராம்". இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர் விசாரணை நந்தினியிடம் நடந்துவருகிறது. ரப்பர் பேண்ட்டால் காசியின் கழுத்தை நெரித்தபோது, குறைவான மதுபோதையில் நந்தினி இருந்தாராம்..!!












Click it and Unblock the Notifications