விருதுநகர் தொகுதி: காமராஜர் மண்ணில் காங்கிரஸ் மீண்டும் வெல்லுமா? வெல்லும் முனைப்பில் விஜயகாந்த் மகன்
விருதுநகர்: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பது விருதுநகர். சிட்டிங் எம்பியான காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், தேமுதிக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர், பாஜகவின் நடிகை ராதிகா சரத்குமார் களம் காண்கிற தொகுதி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர்,
அருப்புக்கோட்டை.

விருதுநகர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்- 14,91,695; ஆண்கள்- 7,28,158; பெண்கள்- 7,63,335; 3-ம் பாலினத்தவர்- 202
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்) 3,07,187
வைகோ(மதிமுக) 2,91,423
பாண்டியராஜன்(தேமுதிக) 1,25,229
கார்த்திக்(பாஜக) 17,336
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
இராதாகிருஷ்ணன்(அதிமுக) 406,694
வைகோ(மதிமுக) 261,143
இரத்தினவேலு(திமுக) 241,505
மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்) 38,482
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்) 4,70,883
அழகர்சாமி( தேமுதிக) 3,16,329
பரமசிவ ஐயப்பன்(அமமுக) 1,07,615
வி. முனியசாமி (மக்கள் நீதி மய்யம்) 57,129
அருள்மொழிதேவன் (நாம் தமிழர் கட்சி) 53,040
2024-ம் ஆண்டு களத்தில் நிற்பவர்கள்
மாணிக்கம் தாகூர்( காங்கிரஸ்)
விஜய பிரபாகர் (தேமுதிக)
ராதிகா சரத்குமார் (பாஜக)
கவுசிக் (நாம் தமிழர் கட்சி)
விருதுநகர் கள நிலவரம் என்ன? அதிமுக 4 முறை வென்ற தொகுதி. மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வென்றன. சிபிஐ கட்சி ஒரு முறை வென்றுள்ளது. திமுக இதுவரை வெல்லாத லோக்சபா தொகுதி இது. திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி வலிமையாக உள்ளது. மதிமுகவுக்கும் வாக்கு வங்கி உள்ள தொகுதி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரு முறை வென்ற தொகுதி. இம்முறை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், நடிகை ராதிகா சரத்குமார் களம் காண்பதால் நட்சத்திர தொகுதியாக உருமாறி இருக்கிறது. வறட்சியால் அதிகமான பாதிப்பைக் கொண்ட தொகுதி. பருத்தி, பருப்பு, எண்ணெய் வித்துகள் அதிகமாக விளைகின்றன. சிறுதொழில்களும் அதிக அளவில் உள்ளன. சிவகாசி பட்டாசு, தீப்பெட்டித் தொழில் உலக பிரசித்தி பெற்றவை. இத்தொழில்களைச் சார்ந்த சிக்கல்களும் கோரிக்கைகளும் இப்போதும் முதன்மை பிரச்சனைகளாக உள்ளன. திமுகவின் வாக்கு வங்கி பலத்தில் காங்கிரஸ் இடைவிடாமல் போட்டியிட்டு வருகிறது. இம்முறை விருதுநகர் களம் கடுமையாக இருக்கும் என்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications