தேவர் ஜெயந்தி - குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம் வெளியீடு
விருதுநகர்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் விவரத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் இதுபற்றி கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சேத்தூர், முறம்பு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி சந்திப்பு பகுதி வழியாக பசும்பொன்னுக்கு செல்லலாம்.

இதேபோல் சிவகாசியில் இருந்து திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன் செல்லலாம். விருதுநகர், அருப்புக்கோட்டை, கானா விளக்கு, கண்ணார்பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன்ன செல்லலாம்,
பந்தல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை கானா விளக்கு கண்ணார்பட்டி ஜங்ஷன் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, கண்ணார்பட்டி ஜங்ஷன், கமுதி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். நரிக்குடியில் இருந்து பார்த்திபனூர் அபிராமம் வழியாக பசும்பொன்னுக்கு செல்லலாம்.
சிவகாசியில் இருந்து இரட்டை பாலம், சிவகாசி பஸ் நிலையம், பிள்ளைக்குழி சந்திப்பு, விளாம்பட்டி சந்திப்பு, எஸ்.எச்.வி.என். பள்ளி, மருதுபாண்டியர் மேட்டு தெரு ஆகிய வழித்தடங்களும், ஆவியூர், நரிக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து மீனாட்சிபுரம் ரோடு, மந்திரி ஓடை, முடுக்கன்குளம், நரிக்குடி ஆகிய வழித்தடங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டியில் இருந்து திருச்சுழி, எம்.புதுப்பட்டி ஆகிய வழித்தடங்களும், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் இருந்து ராமலிங்காமில், குலசேகர நல்லூர், திருசசுழி ரோடு, தமிழ்பாடி சந்திப்பு, ராமசாமி பட்டி, அல்லம்பட்டி, மைலி சந்திப்பு, மிதலை குளம் சந்திப்பு ஆகிய பகுதிகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீரசோழனிலிருந்து பூமாலைப்பட்டி, முத்துராமலிங்கம்புதூர், மண்டலமாணிக்கம், மினாக்குளம், கீழவெம்பூர், அபிராமம் சந்திப்பு, நரிக்குடியிலிருந்து மானாமதுரை ரோடு, ஏ முக்குலத்திலிருந்து ரெட்டை குளம், ஆலந்தூர் திருப்பாச்சேத்தி ரோடு, செங்குளம், கருவாக்குடி, திருப்புவனம் சந்திப்பு ஆகிய பகுதிகளும், பரளச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி, பூலாங்கால் மறவர் பெருங்குடிஆகிய பகுதிகளும், கட்டணூரில் இருந்து கொட்ட பச்சேரி, கருவாக்குடி சந்திப்பு, மானாமதுரை ரோடு ஆகிய பகுதிகள் வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications