விருதுநகர் அருகே கணவரை பிரிந்த புதுப்பெண் முத்துலட்சுமி.. காதலர் தினத்தன்று இருந்த கோலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம்செட்டிகுளம் ஒத்த பட்டியைச் சேர்ந்த 25 வயதாகும் முத்துலட்சுமி நர்சிங் படித்துள்ளார். இவர் ராஜபாளையம் மேல ஆவாரந்தையை சேர்ந்த கோபிநாத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 4 மாதம் முன்பு சென்னையில் திருமணம் செய்துள்ளனர். திடீரென சண்டையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் முத்துலட்சுமி வருத்தத்தில் இருந்துள்ளார்.இவர் காதலர் தினத்தன்று எடுத்த முடிவு குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.
காதல் திருமணம் செய்யும் சிலர் எதார்த்தங்களை உணர மறுக்கிறார்கள்.. பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் யார் சொல்லியும் கேட்காமல் மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்கிறார்கள்.. ஆனால் 2 மாதம் வாழ்ந்த பின்னர் வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது திடீரென சண்டை போட்டு பிரிந்து இருக்கிறார்கள். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கை துணையாக வருபவர்கள் தவறான முடிவெடுக்கிறார்கள்.

இதுபோன்ற வாழ்க்கையில் சவாலான நேரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பலர் முட்டாள்தனமாக முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கு வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது அல்ல.. இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களில் சிலர், சரியான புரிதலுடன் வாழத் தெரியாமல் ஆத்திரத்திலும் அவசரத்திலும் முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்வது அதிகரித்துவிட்டது. சவால்களை எப்படி எதிர்கொள்வது, பிரச்சனைகள் வந்தால் அதனை எப்படி கையாள்வது, அவமானம் வந்தால் அதனை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் பலர் சிக்கலில் தவித்து வருகிறார்கள்.விருதுநகரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடைய தங்கை முத்துலட்சுமி (வயது 25). நர்சிங் படித்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராஜபாளையம் மேல ஆவாரந்தையை சேர்ந்த கோபிநாத் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த காதலுக்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி சென்னைக்கு சென்று அங்கு காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என சொல்லப்படுகிறது. இதையடுத்து முத்துலட்சுமி கோபிநாத் ஜோடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாவும், இதனால் கணவரை பிரிந்து முத்துலட்சுமி ராஜபாளையத்துக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
காதலர் தினத்தன்று முத்துலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் கொழிஞ்சிபட்டி தெருவில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட முத்துலட்சுமி, காதலர் தினத்தில் இந்த விபரீத முடிவெடுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications