விருதுநகரில் காலையில் மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்ற மாணவன்.. மாலையில் இப்படியாக ஆகணும்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் என்பவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த மாணவர் ஆகாஷ்க்கு சில நிமிடங்களில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில், காரில் பயணிக்கும் போது மட்டுமல்ல.. பேருந்துகளில் பயணிக்கும் போது கவனமாக செல்ல வேண்டும்.. குறிப்பாக பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் படியில் பயணிக்கவேண்டிய நிலை வரலாம். படிக்கட்டில் பயணிக்கும் போது கூட்ட நெரிசலில் கீழே விழுக வாய்ப்பு உள்ளது. மேலும் படிக்கட்டில் நம்மை அறியாமல் தவறிவிழவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பேருந்தில் பயணம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவில் வசிப்பவர் அங்குராஜ். இவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. பள்ளிப்படிப்பை முடித்த ஆகாஷ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவார் என கூறப்படுகிறது.
படியில் பயணம்
அப்படித்தான் நேற்று முன்தினம் ஆகாஷ் தனது கல்லூரிக்கு காலையில் சந்தோஷமாக சென்றுள்ளார். கல்லூரி முடிந்து மாலையில் தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்றபோது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மணிகண்டனை (26) கைது செய்தனர்.
படிக்கட்டில் பயணிக்கும் போது, டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் நிலைகுலைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிரேக் பிடித்து உடனே வண்டி எடுத்தாலும் சட்டென தவறி விழுக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை படியில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications