விருதுநகர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் பவானி.. எந்த வீட்டிலும் நடக்கக்கூடாத சம்பவம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் சாலையை சேர்ந்தவர் பவானி. தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பவானி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையில் அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவி பவானிக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேநேரம் தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி பருவ மழை தொடங்கிவிட்டது. கடந்த 17ம் தேதி தொடங்கி, 18, 19ம் தேதிகளில் திருச்செந்தூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, வள்ளியூர் உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவருடைய மகள் பவானிக்கு 17 வயது ஆகிறது. மாணவி பவானி சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து தனது மண் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அந்த வீட்டின் வெளியே மாணவி பவானி அமர்ந்திருந்தார். அப்போது சிவகாசியில் பெய்த தொடர் மழையால் திடீரென வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து பவானி மீது விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் படுகாயம் அடைந்தார். அவரை பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இ்துகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழையால் மண் சுவர் இடிந்து விழுந்து மாணவி பவானி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications