Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் நர்ஸ்.. யாருமில்லாத நேரத்தில் அழைப்பு.. சந்தர்ப்பத்தை சாதகமாக்கிய காதலன்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக 24 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு வேலை பார்த்து வந்தார். இவருக்கு அக்கா ஒருவர் உள்ளார். இவரை சேத்தூர் பகுதியில் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

What happened to the Virudhunagar nurse who invited her boyfriend to her home

அண்மையில் அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. நர்சின் அக்காள் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதால், குழந்தையை கவனித்துக்கொள்ள நர்சான தன் தங்கையை அழைத்து சென்றுள்ளார். அவரும் சென்று அங்கு தங்கி இருந்து குழந்தையை கவனித்து வந்திருக்கிறார்.

இதனிடையே அவர் தங்கி இருந்த வீட்டுக்கு பக்கத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வந்துள்ளது. அங்கு கொத்தனாராக சேத்தூர் வலையர் காலனியைச் சேர்ந்த 28 வயதாகும் மலைக்கனி வேலை செய்து வந்துள்ளார். வேலைக்கு வந்த இடத்தில் அந்த நர்சை அவர் பார்த்துள்ளார். நைசாக அவரிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார். இந்த பேச்சு அவர்களுக்கு இடையே பழக்கத்தை ஏற்படுத்தி நாளடைவில் காதலாகியது. இருவரும் செல்போன் மூலமும் பேசிவந்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள், வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது கொத்தனார் மலைக்கனியை அக்காள் வீட்டுக்கு அந்த நர்சு வரவழைத்திருக்கிறார். அங்கு சென்ற மலைக்கனி, அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்,. கடைக்கு அவசரம் அவசரமாக சென்று குளிர்பானம் வாங்கி வந்து நர்சிடம் குடிக்கக் கொடுத்திருக்கிறார்..

அந்த குளிர்பானத்தை குடித்த சற்று நேரத்தில் நர்சு மயக்கம் அடைந்தாராம். அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்ததாக சொல்லப்படுகிறது. சற்று நேரம் கழித்து நர்சு மயக்கம் தௌிந்து எழுந்தபோது, ஆடைகள் கலைந்து இருந்ததை கண்டு அதிர்ந்தார்.

அப்போது, நான்தான் உன்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். எனவே நான் உன்னுடன் உறவு கொண்டேன் எனக்கூறி அந்த ஆபாச வீடியோவையும் அவரிடம் காண்பித்திருக்கிறார்.அந்த வீடியோவை அழித்துவிடுங்கள், என நர்சு கெஞ்சியுள்ளார். சில நாட்கள் கழித்து, என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என நர்சு கேட்டபோது, அவர் அலட்சியப்படுத்தியதுடன், நர்சின் அத்தை மகனுக்கு அந்த வீடியோவை அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சின் குடும்பத்தினர், நர்சை திருமணம் செய்துகொள்ளுமாறு அவர்களும் மலைக்கனியை கேட்டபோது, மலைக்கனி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைக்கனியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+