நிர்மலா தேவி ஜெயிலுக்குள்ளே போனதுமே கிளம்பிய பூதம்.. "அவரும்" சிக்கணும், விடக்கூடாது.. யார் பாருங்க
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கில் உரிய விசாரணையை நடத்தினால், பலபேர் சிக்குவார்கள் என்று கூறியிருக்கும் கருத்துக்கள், நிர்மலா தேவி வழக்கில் மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது..
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதற்காக, "ஆடியோவுடன்" வசமாக சிக்கினார் பேராசிரியை நிர்மலாதேவி.. பணக்கஷ்டத்தில் உள்ள மாணவிகள், வறுமையில் உள்ள சூழலை அடிப்படையாக வைத்து, அவர்களை தவறான வழியில் விழவைக்க முயற்சித்தார் நிர்மலா தேவி..

வாதங்கள்: கடந்த 2018ம் முதலே இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, இந்த வழக்கில் எப்போதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்த நேரம், இந்த வழக்கு தள்ளிப்போய்கொண்டே இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது... அத்துடன் தண்டனை விவரங்கள் 30ம் தேதி அதாவது நேற்றைய தினம் வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
கண்கலங்கி: அதுவரை கலகலப்பாக காணப்பட்ட முகம், தண்டனை உறுதி என்று நீதிபதி சொன்னதுமே, கண்கலங்கிவிட்டார் நிர்மலாதேவி. அப்போது, நிர்மலாதேவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனையை குறைத்து வழங்க வேண்டும், தங்களது தரப்பு இறுதி வாதங்களை தெரிவிக்க அவகாசம் வேண்டும்" என்று வாதிட்டார்.
இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் வாதிடும்போது, "நிர்மலா தேவி மீது காவல்துறை பதிவு செய்திருந்த 4 பிரிவுகளில் 2 பிரிவுகள் இந்த வழக்கிற்கு பொருந்தாது. அப்படியிருக்கும்போது, நிர்மலா தேவி செய்த செயலால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் மாணவிகள் எந்தவகையிலும் நேரடியாக பாதிக்கவில்லை.
மாணவிகள்: நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் அளித்த மாணவிகள் சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். மாணவிகள் எந்த வகையிலும் நேரடியாக பாதிக்கவில்லை. அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், "மாணவிகள் யாரும் பாதிக்கப்படவில்லைதான்.. ஆனாலும் பாதிக்கப்படுவார்கள் என்றுதான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. துன்புறுத்தும் வகையில் பேசி குற்றத்துக்கு அழைத்ததே குற்றம்தானே? சாட்சிகளிடம் விசாரணையும் முறையாக நடைபெற்றுள்ளால், குற்றவாளியாக என்று அறிவிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு எந்த வகையிலும் தண்டனையை குறைத்து விடக்கூடாது" என்று எதிர்வாதத்தை முன் வைத்தார்
வாதங்கள்: இப்படி 2 தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், சிலமணி நேரங்கள் கழித்து தீர்ப்பை வாசித்தார்.. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 வருட சிறை தண்டனையும், 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார்...
இது ஏக கால தண்டனை என்பதால், வழங்கப்பட்ட தண்டனையில் எது உட்சபட்ச தண்டனையோ, அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற விதியின்படி 10 ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும்' என்றார் நீதிபதி.
அதிர்ந்த நிர்மலா தேவி: இந்த தண்டனையை கேட்டதுமே கண்கலங்கிய நிர்மலாதேவியை, போலீசார் பத்திரமாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, தனியார் சேனல் ஒன்றுக்கு நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கில் உரிய விசாரணை நடத்தினால், முன்னாள் ஆளுநர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்டோர் சிக்குவார்கள்" என்று தெரிவித்துள்ளார்...
பசும்பொன் பாண்டியன்: ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை பசும்பொன் பாண்டியன் சந்திக்கும்போதும், இதே கோரிக்கையைதான் வலியுறுத்தி வருகிறார்.. அதுமட்டுமல்ல, நிர்மலா தேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருப்பதாகவும், ஆளுநர் இங்கே இருக்கும் வகையில் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை முறையாக நடைபெறாது என்றும் 3 வருடங்களுக்கு முன்பேயே பசும்பொன் பாண்டியன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அதாவது, மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடிபோலீஸாரால் நிர்மலாதேவி, கைது செய்யப்பட்டபோதே, இந்த சம்பவத்தில் தமிழகஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி பரபரப்பான கருத்துகள் அப்போது வெளியாகியிருந்தன.. ஆனால், இதை ஆளுநர் மாளிகை வலுவாக மறுத்தது.
சந்தானம்: எனவே, ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.. சந்தானம் குழுவும் விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்தது.இந்தக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களில், மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமாரும் ஒருவராவர்.
நேற்றைய தினம் நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு குறித்து முத்துக்குமார் சொல்லும்போது, "நிர்மலாதேவிக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். அதேநேரத்தில், நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளை தவறாகப்பயன்படுத்தினார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதுகுறித்தும் தனியாக விசாரிக்கவேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பக் கூடாது. இந்த விசாரணையை மேற்கொண்டால்தான், இந்த வழக்கு முழுமையடையும்" என்று கூறியிருந்தார்.
பரபரப்பு: ஆக, இந்த வழக்கின் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும், "மொத்த" பேரும் சிக்க வேண்டும் என்று பசும்பொன் பாண்டியனும் கோரிக்கை விடுத்துள்ளார், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.. எனவே, இந்த வழக்கின் பரபரப்பு இன்னமும் நீள்கிறது..
நிர்மலா தேவி ஜெயிலுக்கு சென்றபிறகும்கூட, இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருப்பது மிகுந்த அதிர்வலையையும் தமிழகத்தில் உண்டுபண்ணி வருகிறது.. நிஜமாகவே அந்த கருப்பு ஆடு சிக்குமா?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications