சிவகாசியின் முதல் பெண் மேயர் பதவி யாருக்கு?.. எதிர்பார்ப்பில் காங்.. விட்டுத் தருமா திமுக?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சிவகாசி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் அந்த பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சிவகாசியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற போவது யார் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிலும் சிவகாசியை பெற திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம்
அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மேயர் பதவியை பெற கணிசமான இடங்களில் வெற்றி பெற தீவிரமாகியுள்ளனர். ஒவ்வொரு கட்சிகளும் மக்களை சந்தித்து அங்குள்ள உள்ளூர் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கேற்ப வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன.

இரு நகராட்சிகள்
மேலும் வேட்பாளர்களும் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய இரு நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சிவகாசி மேயருக்கான முதல் தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது. இந்த சிவகாசி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் மேயர்
இதனால் இந்த மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற அரசியல் கட்சிகள் போட்டி போடுகின்றன. சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் ஆண்கள், பெண்கள் தலா 24 வார்டுகளில் போட்டியிடுகிறார்கள். அது போல் சிவகாசி மாநகராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சற்று அதிகம் உள்ளனர்.

திருத்தங்கல் நகராட்சி
நாளை தை அமாவாசை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய சில கட்சிகள் உத்தேசித்துள்ளன. சிவகாசி நகராட்சியாக இருந்த போது காங்கிரஸ் கட்சியே நகராட்சி தலைவர் பதவிகளில் வென்று வந்தது. அது போல் திருத்தங்கல் நகராட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்களே தலைவர் பதவியை அதிக முறை வகித்துள்ளனர்.

சிவகாசி மேயர் பதவி
இந்த நிலையில் சிவகாசி மேயர் பதவியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கேட்டு பெறும் முடிவில் இருக்கிறது. 3 முதல் 4 மேயர் பதவிகளையாவது காங்கிரஸ் கேட்டு பெற திட்டமிட்டுள்ளது. சிவகாசி வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடம் என்பதால் இந்த பதவியில் காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசு தொழிலில் கோலோச்சி வருவதால் இந்த மேயர் பதவியை திமுக விட்டு தராது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சிவகாசி மேயர் யார் என்பதை விட போட்டியிடும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications