வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்க இருந்த பேரன்.. ஆனால் பென்ஸ் காரின் ஸ்டியரிங்கை பிடித்து அசத்தல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாட்டியின் உடல்நிலையை காப்பாற்ற காரை ஓட்டிச் சென்று உயிரை காப்பாற்றிய சிறுவனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

அமெரிக்காவின் இந்தியனாபாலிஸ் பகுதியை சேர்ந்தவர் பி ஜே பிரூயர் லாயே (11). இவர் தனது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் கோ கார்ட் வண்டியை ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அவரது பாட்டி ஏஞ்சலா நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். திடீரென ஏஞ்சலாவுக்கு நடுக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு தீடிரென குறைந்தது.

திபெத் படை- களமிறக்கிய இந்தியா- வெலவெலத்து ஓடிய சீனா...சர்வதேச அரசியல் களத்திலும் பதிலடி வெயிட்டிங் திபெத் படை- களமிறக்கிய இந்தியா- வெலவெலத்து ஓடிய சீனா...சர்வதேச அரசியல் களத்திலும் பதிலடி வெயிட்டிங்

பாட்டி

பாட்டி

இதனால் அவருக்கு உடனே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை உணர்ந்த பிரூயர் லாயே, தனது கோ கார்ட் வண்டியிலேயே வேகமாக வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த பாட்டியின் பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு பாட்டியை அதில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம்

இதுகுறித்து ஏஞ்சலா கூறுகையில் நான் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரென அங்கு என்னுடைய பென்ஸ் கார் வருவதை பார்த்தேன். எனது காரை யார் ஓட்டி வருகிறார்கள் என பார்த்த போது உள்ளே எனது பெயரன் லாயே இருந்தான். அவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

எனினும் கார் நன்றாக ஓட்டுவான். வீட்டில் காரை எடுக்க எனது கணவருக்கு உதவி செய்வான். என்னை காரில் அமர வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். சாலையை விட்டு வெளியே எங்கும் தடுமாறாதபடி அவன் கார் ஓட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிறுவன் செய்ததை

சிறுவன் செய்ததை

வீட்டிற்கு என்னை அழைத்து வந்து என்னுடைய குளுக்கோஸ் மாத்திரையை சரியான நேரத்தில் கொடுத்து எனது உயிரை காப்பாற்றினான் என்றார் ஏஞ்சலா. இதை தனது பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருந்தார். லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது தவறு என்றாலும் சரியான நேரத்தில் செயல்பட்டு பாட்டியின் உயிரை காப்பாற்ற இந்த சிறுவன் செய்ததை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

English summary
11 years old boy drives car to save his grandmother's life as she was struggling with low sugar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X