அமெரிக்காவில் 11 வயது சிறுமியை கடத்த முயன்ற மர்மநபர்.. சாதுர்யமாக தப்பிய சிறுமி!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் 11 வயது சிறுமியை ஒருவர் கடத்த முயற்சித்து அவருடன் போராடி சிறுமி தப்பிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் இந்த கடத்தல் முயற்சி நடந்தது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு 11 வயது சிறுமி நிற்கொண்டிருந்தார்.

அப்போது காரில் இருந்து ஒருவர் வேகமாக இறங்கி அந்ச சிறுமியை நோக்கி ஓடி வருகிறார். அந்த நபர் அந்த சிறுமியை பிடிக்கிறார். அந்த சிறுமியோ எப்படியோ அவரிடம் இருந்து போராடி தப்புகிறார்.
இதனால் அந்த நபரின் கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறுமி பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து புளோரிடா மாகாண போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications