கலிபோர்னியா மது பாரில் சரமாரி துப்பாக்கி சூடு.. 13 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள இசை மற்றும் நடன பார் ஒன்றில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல்) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

13 killed in California bar mass shooting

கலிபோர்னியாவில் இருக்கும் 'பார்டர்லைன் பார் அண்ட் க்ரில்' என்ற பிரபல பாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஒரு பக்கம், ஆட்டம் பாட்டம் மறுபக்கம் என கூட்டம் நிரம்பி வழிந்தபோது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

பாருக்குள் இருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் மர்ம நபரால் சுடப்பட்டதாகவும், இதில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், நடந்த சம்பவம் குறித்து தனக்கு விவரிக்கப்பட்டு உள்ளதாகவும், துப்பாக்கி சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள் இப்போது வெளியாகவில்லை. அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+