கொரோனா: அமெரிக்க பாதிப்பில் 50 சதவீதத்தை எட்டியது பிரேசில் பாதிப்பு.. மக்கள் கவலை
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொரோனா பாதிப்பில் 50 சதவீத்தை அடைந்தது பிரேசில் பாதிப்பு. மருத்துவ வசதிகள் இல்லாததால் இத்தனை பேர் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்துவிட்டது.

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சமாகும். இதுவரை 54 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1.28 லட்சத்தை தாண்டியது.
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயர்ந்துவிட்டது. பிரேசிலில் 57 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகிவுள்ளனர். ரஷ்யாவில் 6.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரஷ்யாவில் 8,969 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் 5.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் 16,103 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மொத்தம் 3.10 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரிட்டனில் 3.10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 43, 514 ஆகும்.
ஸ்பெயினில் 2.95 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 28,341 பேர் பலியாகிவிட்டனர். பெருவில் 2.75 லட்சம் பேரும் சிலியில் 2.67 லட்சம் பேரும், இத்தாலியில் 2.40 லட்சம் பேரும், ஈரானில் 2.20 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications