விடாமல் அடிக்கும் கொரோனா.. உலகளவில் அதிகரிக்கும் எண்ணிக்கை - பல நாடுகள் கவலை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 156,669,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை போல பல நாடுகளிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

Recommended Video

    Coronavirus-ன் 2nd Wave May இறுதியில் படிப்படியாக குறையும் - Virologist நம்பிக்கை

    உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை வாட்டி வதக்கி வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிப்பதும், குறைவதுமாக வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

    அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,268,948 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்..

     சற்று குறைந்த நம்பர்ஸ்

    சற்று குறைந்த நம்பர்ஸ்

    உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 156,669,611 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 134,024,971 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 45,841 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவாகும். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 847 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.

     பிரிட்டன் கலக்கம்

    பிரிட்டன் கலக்கம்

    அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 72,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,531 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தில் 2,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும். பிரான்சில் 21,712 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய 26,000 என்ற பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து கணிசமாக குறைந்துள்ளது. அங்கு ஒரேநாளில் 219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

     தவிக்கும் இத்தாலி

    தவிக்கும் இத்தாலி

    ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 351 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 11,807 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

     உலகுக்கு எச்சரிக்கை

    உலகுக்கு எச்சரிக்கை

    இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா அட்ஜெய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரழிவைத் தடுக்க அரசுகள் தங்கள் அதிகாரத்துக்குள்ளான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம், தாமதமின்றி முன்வந்து உதவ வேண்டும். தெற்காசியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகள், 11 ஆயிரம் தாய்மாரின் உயிர்கள் பறிபோய் உள்ளது. வைரஸ்களுக்கு எல்லை கிடையாது. நாம் உலக சமுதாயமாய் ஒன்றுபட்டு, இந்த பேரழிவை தடுத்து நிறுத்தி நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+