உலகளவில் கொரோனாவால் 18.76 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.48 லட்சமானது!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 187,617,639 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய நிலையில் இன்னும் அதன் பாதிப்புகள் அடுத்தடுத்த நிலைகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதை எதிர்கொள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 187,617,639 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 171,579,875 ஆக உள்ளது. கொரோனாவால் இது வரை உலகளவில் 4,048,919 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் அமெரிக்காவில் 34,732,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 6.22 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,244,103 ஆகும்.
இந்தியாவில் 30,873,907 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 408,792 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 30,007,200 ஆகும். பிரேசிலில் 1.90 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரேசிலில் 5.33 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
பிரான்ஸில் 58 லட்சம் பேரும், துருக்கியில் 54 லட்சம் பேரும் ரஷ்யாவில் 57 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6 ஆயிரம் பேரும் இந்தியாவில் 37 ஆயிரம் பேரும் பிரேசிலில் 20 ஆயிரம் பேரும் பிரான்ஸில் 4 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications