மோடி கொடுத்த வைரக்கல் ஓகே! ஜோ பைடன், ஜில் பைடன் இருவரும் மோடிக்கு கொடுத்த கிஃப்ட் என்னென்ன தெரியுமா?
வாஷங்டன்: வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் மோடியை வரவேற்று விருந்து அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர், பிரதமர் மோடிக்கு, பழமைவாய்ந்த கேமரா, பிரத்யேகமாக கையெழுத்திடப்பட்ட கவிதைப் புத்தகம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை பரிசாக அளித்துள்ளனர்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன் சிறப்பான வரவேற்பு அளித்தார். வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் வரவேற்றனர்.

இருவரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்திய இசை மற்றும் நடனத்தை ரசித்தனர். பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்றார். விருந்தளிப்பு முடிந்ததும் அவருக்கு பழமைான பாரம்பரியான புத்தகம் மற்றும் கேமராவை பரிசாக அளித்தார் அதிபர் பைடன்.
மோடி அமெரிக்க பயணம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் நியூயார்க் சென்ற பிரதமர் மோடி அங்கு, எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். இதையடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்நாட்டு அரசு சார்பில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முக்கிய சந்திப்பு: அதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்த பிரதமர் மோடி, வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், சீனா விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோடிக்கு வழங்கப்பட்ட பிரத்யேக பரிசுகள்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையால் செய்யப்பட்ட, பழமையான American book galley-யை அதிகாரப்பூர்வ பரிசாக வழங்கியுள்ளனர்.
ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவின் காப்புரிமையின் காப்பக தொலைநகல் அச்சு, அமெரிக்க வனவிலங்கு புகைப்படங்கள் பற்றிய ஹார்ட்கவர் புத்தகம், பழங்கால அமெரிக்க கேமரா ஆகியவற்றை ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியுள்ளார். ராபர்ட் ஃப்ரோஸ்ட் கையொப்பமிடப்பட்ட அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பின் முதல் பதிப்பை ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மைசூர் சந்தனத்தால் செய்யப்பட்ட கைவினைஞரால் செய்யப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசளித்தார். அதோடு ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லை பரிசாக வழங்கினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications