22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்.. அமெரிக்கா மேம்பாலத்தை சாய்த்த சரக்கு கப்பல் பற்றிய திடுக் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கப்பல் மோதியும் மொத்த பாலமும் உருக்குலைந்தது தண்ணீக்குள் விழுந்தது. இந்நிலையில் தான் அந்த கப்பலின் குழுவில் (CREW) இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரும்பாலனா பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் தினமும் வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்துக்கு கீழே கப்பல்கள் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் பாலத்தின் மேல்புறம் கார் உள்ளிட்ட வாகனங்களும் கப்பலுக்கு கீழே ஆற்று தண்ணீரில் கப்பல்களும் செல்வதை நாம் பார்க்கலாம்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் நேரப்படி இன்று அதிகாலை 1.35 மணியளவில் பல்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதாவது பாலத்தின் ஒரு பகுதியில் சரக்கு கப்பல் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த மொத்த பாலமும் உருக்குலைந்துபோனது. அதாவது கப்பல் மோதிய வேகத்தில் பாலம் அப்படியே நொறுங்கி தண்ணீருக்குள் விழுந்தது.
இதனால் பாலத்தில் சென்ற வாகனங்கள் தண்ணீருக்குள் விழுந்தன. ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த விபத்து நடந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மேலும் விபத்து நடந்தவுடன் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை அவர்கள் மீட்டனர் .
இந்நிலையில் தான் பாலத்தில் மோதிய சரக்கு கப்பல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ‛டாலி' எனும் பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் கொள்ளளவு என்பது 10,000 டிஇயூவாகும். ஆனால் விபத்து நடந்தபோது கப்பலில் 4,679 டியூயூ அளவில் சரக்கு இருந்துள்ளது. இந்த கப்பல் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் எனு் நிறுவனத்தை சேர்ந்தது.
இந்த கப்பலில் உள்ள குழுவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ள. அதாவது கப்பலை இயக்கும் குழுவில்(Crew) அங்கம் வகிக்கும் 22 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை சினர்ஜி மரைன் குழு உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் கப்பல் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கப்பல் பால்டிமோரில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி உள்ளது. இருப்பினும் கப்பல் எப்படி மேம்பாலத்தின தூணில் மோதியது அதற்கான காரணம் என்ன ? என்பது இன்னும் வெளிவரவில்லை.
இத்தகைய சூழலில் தான் அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கப்பல் எப்படி மேம்பாலத்தின் மீது மோதியது? கப்பலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications