இந்தியா மீது 50% வரி உயர்வு நாளை முதல் அமல்.. அமெரிக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா, ஐரோப்பா ஒன்றியம் எதிர்த்து வருகிறது. இதைக் கண்டிக்கும் விதமாக இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தியிருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வரி படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் என்று கூறிய நிலையில், மேலும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் (நாளை) அமலுக்கு வரவுள்ளது.

இந்தியா - ரஷ்யா
ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் இறங்கியது. சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்த காரணத்தால் இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் அதை கொள்முதல் செய்தனர்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யா அந்தப் பணத்தை மீண்டும் போருக்கு பயன்படுத்துவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் விமர்சனம் செய்தார். இந்தியா, சீனா பொருட்களுக்கான அமெரிக்க வரியையும் அவர் உயர்த்தினார். அதிகபட்சமாக இந்தியா மீதான வரியை அவர் 50 சதவீதம் உயர்த்தியுள்ளார்.
இந்தியா அமெரிக்கா உறவில் விரிசல்
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவை ரஷ்யாவிடமிருந்த 40 சதவீதத்துக்கும் மேல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு இடியை இறக்கியது. இந்த வரி விதிப்பிற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம், எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இதனால், இந்தியா - அமெரிக்கா நெருங்கிய உறவிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்திய பொருள்கள் மீதான இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் (நாளை) அமலுக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய தொழில் துறையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வரி விதிப்பு நாளை முதல் அமல்
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், டிரம்பின் வரி விதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர் கிடங்குகளில் இருக்கும் அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிடில், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில், வரும் நாட்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்











Click it and Unblock the Notifications