உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.. பலி எண்ணிக்கை 10.37 லட்சம்
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமானது. கொரோனாவிலிருந்து இதுவரை 2.61 கோடி பேர் மீண்டுள்ளனர். 66,267 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 லட்சமாகும். இதுவரை 2.14 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,925 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 65 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1.01 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். ஒரே நாளில் 75,479 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
பிரேசிலில் 49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.46 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்த நாடுகளில் உலகளவில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில் தற்போது 3ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications