விமானத்தில் மாஸ்க் அணியாமல்.. பெண்ணின் உள்ளாடையை அணிந்த நபர்.. கடைசியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பெண்ணின் உள்ளாடையை மாஸ்க்காக அணிந்த ஆண் நபர் புளோரிடா விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூச்சுக் காற்று மற்றும் சளி நீர் துளிகளிலிருந்து அந்த வைரஸ் பிறருக்கு பரவுகிறது.

இதனால் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவுடன் வாழ பழகியது போல் மாஸ்க் அணிந்து கொண்டே இருக்கவும் பழகிவிட்டோம். தற்போது புதிதாக பரவி வரும் ஓமிக்ரான் உலகளவில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது.

வைரஸ்

வைரஸ்

தடுப்பூசி போட்டிருந்தாலும் அதற்கு மசியாத வைரஸாக இந்த ஓமிக்ரான் உள்ளது. அதனால் இரு தடுப்பூசிகளை போட்டு மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் எங்கு போனாலும் மாஸ்க் அணிந்து செல்லும் நிலை உள்ளது.

விமானத்தில் பயணிக்க

விமானத்தில் பயணிக்க

பொதுமக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அவர்கள் பேருந்து, ரயில், விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது. அது போல் கடைகளில் பொருட்களை வாங்கவும் அனுமதி கிடையாது. மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டபின்னரும் ஒரு சிலர் அதுகுறித்து கவலையேதும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றிவருகிறார்கள்.

பிரச்சினை

பிரச்சினை

ஒரு சிலரின் அஜாக்கிரதையால் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இப்படித்தான் ஒருவர் அமெரிக்காவில் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்ய போய் என்ன நடந்தது என பாருங்கள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் மாஸ்க் அணியவில்லை. இதனால் அவசர அவசரமாக பெண்களின் உள்ளாடையை மாஸ்க் போல் அணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

வீடியோ

இந்த பயணியின் செயல்களை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அங்கு வந்த விமான பணிப்பெண்கள், அவரிடம் போய் மாஸ்கை அணியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பயணம் செய்வதை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர். அதற்கு அந்த நபர் அந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

பரபரப்பு

பரபரப்பு

விமானம் புறப்படுவதற்கு முன்னரே இந்த பிரச்சினை நடந்ததால் வேறு வழியின்றி அவரை கீழே இறக்கிவிட்டனர். விசாரணையில் அவருக்கு 38 வயதாகிறது என்றும் அவரது பெயர் ஆடம் ஜென்னி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+