4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது!
வாஷிங்டன்: நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் நள்ளிரவு 12.27 மணிக்கு பாய்ந்தது. அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டது.
Recommended Video
2003-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால் நாசா தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி காணப்பட்டது.
இதையடுத்து நள்ளிரவு நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றது. இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர். ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும்.
இந்த 4 பேரும் ஏற்கெனவே அங்கிருக்கும் இரு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள். க்ரூ டிராகன் ரெசிலியன்ஸ் என்ற விண்கலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications