ரூ 2 லட்சத்துக்கு அமேசானில் பொம்மைகளை ஆர்டர் செய்த 4 வயது சிறுவன்.. என்ன நடந்தது தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் 4 வயது சிறுவன் ஒருவன் சுமார் ரூ 2 லட்சம் மதிப்பிலான ஸ்பாஞ்ச் பாப் பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்து தனது அம்மாவை வெலவெலக்க செய்துவிட்டார்.
நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் நோஹா பிரையண்ட். 4 வயதாகும் இந்த சிறுவன் தனது தாயின் செல்போனை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது அதில் அமேசான் செயலிக்குள் சென்று பார்த்துள்ளான்.
அப்போது அதில் தனக்கு பிடித்தமான ஸ்பாஞ்ச் பாப் பொம்மைகளை அமேசான் நிறுவனம் சார்பில் ஆர்டர் செய்துள்ளான். சுமார் 918 பொம்மைகளை ஆர்டர் செய்தான்.

அத்தை வீடு
பின்னர் தனது அத்தையின் வீட்டுக்கு பொம்மைகளை டெலிவரி செய்யுமாறு முகவரியையும் அந்த செயலியில் குறிப்பிட்டிருந்தான். இதையடுத்து டெலிவரிக்கு பொருட்களை கொரியர் நபர் எடுத்துச் சென்ற போதுதான் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

ஆர்டர்
மேலும் அந்த பொம்மைகளை வாங்கும் போதே ஆர்டர் செய்த பொருட்கள் திருப்பி வாங்கிக் கொள்ளப்படாது என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் அத்தகைய பணம் அந்த தாயிடம் இல்லை. இதையடுத்து அவரது தோழி பணத்தை பெற ஒரு ஐடியா கொடுத்தார்.

சிறுவன்
அதன்படி "GoFundMe" என்ற கணக்கை தொடங்கி சிறுவனின் தாய் உண்மை நிலவரத்தை சொல்லி 2,619 டாலர்களை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் சிறுவன் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

நன்கொடை கேட்ட தாய்
இந்த நிலையில் இந்த பதிவை பார்த்த பலரும் தங்களால் இயன்றதை நன்கொடையாக கொடுத்தனர். மேலும் அந்த கணக்கை வைரலாக்கினர். இதையடுத்து எதிர்பார்த்தை விட அதிகமான தொகை அதாவது 5,780 டாலர் சிறுவனின் தாயின் அக்கவுன்ட்டிற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அமேசானுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை சிறுவனின் படிப்புக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஐஸ்கிரீம்
அந்த தாய்க்கு நோஹாவுடன் சேர்த்து 3 குழந்தைகள் உள்ளனர். சிறுவனின் இந்த சுட்டித்தனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிய ஐஸ்கிரீம் தொழிலுக்கு சிறுவன் இந்த பொம்மைகளை வாங்கியுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications