"அதிர்ந்த அலாஸ்கா.." 7.4 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கே இருக்கும் மாகாணம் அலாஸ்கா.. இந்த அலாஸ்காவில் இப்போது திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.4% பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ (5.78 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த அலாஸ்கா என்பது அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்று என்ற போதிலும், அது அமெரிக்காவில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறது. அதாவது அலாஸ்கா மட்டுமே கனடாவுக்கு மேல் வட துருவத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இப்படித் தனித்து இருந்தாலும் கூட இதுவும் அமெரிக்கா மாகாணங்களில் ஒன்று தான். இங்கே தான் இப்போது இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவில் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சத்தில் பொதுமக்களும் பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் எந்தளவுக்குத் தேசம் ஏற்பட்டுள்ளது. யாராவது உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அலாஸ்கா மாகாணமும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலாஸ்கா 9.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏறப்பட்டது. வட அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் இதுதான் வலிமையானதாகும்.
இதனால் சுனாமியும் ஏற்பட்ட நிலையில், அலாஸ்கா வளைகுடா, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே இப்போது அங்கே 7.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications