வெறும் 5 நிமிட வீடியோ கால்.. 80 பேரும் வேலை போச்சு!" ஒரே நேரத்தில் இந்திய ஊழியர்கள் பணிநீக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கஸ்டமர் சப்போர்ட் டீமில் வேலை செய்த அனைவரும் வெறும் 5 நிமிட வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர். கூகுள் மீட் மூலம் வீடியோ காலில் அனைவரும் இணைந்த நிலையில், மொத்தமாக பணிநீக்கம் செய்ததாக ஊழியர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சுமார் 80 ஊழியர்கள் திடீரென வேலையை இழந்ததாகவும், இதனால் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தில் வேலையிழப்பு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நன்றாக வேலை செய்யும் ஊழியர்களும் கூட நொடியில் வேலையிழக்கும் ஆபத்தே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை அந்த ஊழியர் நபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது
பணிநீக்கத்துக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் சம்பவத்தன்று ஆபீஸ் வர வேண்டாம் என மட்டும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். நிர்வாக காரணங்களால் ஒரு நாள் மட்டும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஷிப்ட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுமார் 3 மணி நேரம் பணியாற்றிய நிலையில், இரவு 9.30 மணியளவில் கூகுள் மீட் லிங்க்கை அனுப்பி, அனைவரையும் சேருமாறு சொல்லியுள்ளனர். அந்த வீடியோ காலில் தான் கன்யூசமர் சப்போர்ட் பிரிவில் இந்திய டீமில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய டீம்
அந்த நபர் மேலும், "நான் 6.30 மணி ஷிப்ட்டில் பணியாற்றி கொண்டிருந்தேன். இரவு 9.30 மணிக்கு கூகுள் மீட்டில் சேர சொன்னார்கள். அப்போது இந்திய டீம் முழுவதும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மொத்தமாக 80 ஊழியர்கள் இருந்தனர். அனைவரும் வேலை இழந்துவிட்டோம். வெறும் 5 நிமிட அழைப்பில் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என அந்த ஊழியர் பதிவிட்டுள்ளார்.
கஸ்டமர் சப்போர்ட் டீம் என்பதால் எப்போது வேலை போகும் என்றே தெரியாத நிலையில் தான் சில மாதங்களாகவே இருந்ததாக அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அனைவருமே தீவிரமாக வேலை செய்து வந்ததாகவும் ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி அனைத்து ஊழியர்களையும் நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த ஊழியர், இந்திய ஊழியர்களின் செயல்திறன் போதவில்லை என அவர்கள் சொன்னதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்திய அணியிடமிருந்து எதிர்பார்த்த அவுட்புட் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர். ஆனால் அது உண்மையல்ல. அமெரிக்காவில் இருந்து வேலை செய்தவர்கள் தான் மோசமாக பணியாற்றினர். பல விஷயங்களை சரியாகச் செய்யாமல் இருந்தனர். ஆனால் வேலை பாதுகாப்பு குறித்த அச்சத்தால் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக வேலை செய்து வந்தோம்" என்றார்.
அவரது போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், ஒரே நேரத்தில் இவ்வளவு ஊழியர்கள் வேலையை இழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும், "எப்போது வேண்டுமானாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை வேலையை விட்டு வெளியேற்றிவிடலாம் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
மெகா பணிநீக்கம்
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆன்லைன் பிஸ்னஸ் செக்கிங் அகவுண்ட்ஸ், பேமண்ட்ஸ் டூல் மற்றும் லைன் ஆஃப் கிரெடிட்,் உள்ளிட்ட நிதி சேவைகளை வழங்கும் டிஜிட்டல் வங்கி தளமாகும். இதில் தான் இந்த மெகா பணிநீக்கம் நடந்துள்ளது. இந்திய கஸ்டமர் சப்போர்ட் டீமிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான செயல்திறன் கிடைக்காததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்ததாகவும் அந்த ஊழியர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
