56 வருடமாக வயிற்றில் கருவை சுமந்த பெண்.. எக்ஸ்ரேவில் காத்திருந்த ஷாக்! மருத்துவ உலகில் வினோத சம்பவம்
வாஷிங்டன்: 81 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் 56 வருடங்களாக குழந்தையின் கரு இறந்த நிலையில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றிய நிலையில், அந்த மூதாட்டி தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இறந்த நிலையில், 56 வருடமாக இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். மருத்துவர்களையே அதிர வைத்த இந்த வினோத சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் டேனிலா வோரா. 81 வயதான இவருக்கு பல ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எனினும், சமீப காலமாக வயிற்று வலி அதிகரித்ததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
முதலில் சிறு நீர் தொற்று காரணமாக இருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள்.. வயிற்று வலி அதன்பிறகும் சரியாகாத காரணத்தால், ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இதில், அடி வயிற்று பகுதியில் இறந்த நிலையில் சிசு இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ உலகில் ஸ்டோன் பேபி என்று இது அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருப்பையில் உருவாகாமல் கருப்பைக்கு வெளியே இந்த சிசு வளர்ந்து அதன்பிறகு இறந்துள்ளது.
இளம் பருவத்தில் முதல் முறையாக கருவுற்ற சமயத்தில் இந்த ஸ்டோன் பேபி உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியில் வளர்வதால் இந்த கரு உயிரற்றதாகிவிடும். இறந்த பிறகு சில நாட்களில் ஸ்டோன் பேபியாக மாறிவிடும். டேனிலாவிற்கு 7 குழந்தைகள் அதன்பிறகு பிறந்துள்ளன. எனினும், அவருக்கு வயிற்றில் வலியானது தொடர்ச்சியாக இருந்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வயிற்றில் 56 ஆண்டுகளாக இருந்த ஸ்டோன் பேபியை மருத்துவர்கள் அகற்றினர். எனினும் அதன்பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக டேனிலா உயிரிழந்தார். டேனியலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது தொடர்பாக கூறியதாவது:-
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அந்தப்பெண் உயிரிழந்தார். கருப்பைக்கு பதிலாக வெளியே கரு உருவாகும் சில அரிதான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதை எக்டோபிக் பிரகனன்சி என்று அழைப்பார்கள். கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உருவாகும். அங்கு கருவினால் வளர முடியாது. அதேபோன்ற ஒரு அரிய கேஸ்தான் இது.
இதுபோன்ற நேரங்களில் அதிகப்படியான வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், டேனியலுக்கு அதுபோன்று எதுவும் ஏற்படவில்லை. எக்ஸ்ரே எடுக்கும் வரை எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக தெரியவில்லை. திடீரென பெண்ணுக்கு அதிகப்படியான வலி ஏற்பட்டு அவர் உயிரிழக்கவும் செய்துவிட்டார் என்றார்"
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications