வீட்டு கழிப்பறையில் கடகடவென சப்தம்.. அச்சத்தில் தம்பதி.. போய் பார்த்தால்.. ஆச்சரியம்.. உவ்வே!
வாஷிங்டன்: 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஐபோன் தற்போது கிடைத்துள்ளதாம். இதற்கு மகிழ்ச்சி அடைவதா, வேதனை அடைவதா என குழப்பத்தில் இருக்கிறாராம் ஐபோனின் உரிமையாளர்!
ஒரு குறிப்பிட்ட ஊருக்கு பஸ்ஸுக்காக காத்திருந்தால் அந்த பஸ் வராது. ஆனால் வேறு ஊர்களுக்கு நிறைய வந்து கொண்டே இருக்கும். அது போல் நாம் ஒரு பொருளை தேடும் போது கிடைக்காது, வேறொரு பொருளை தேடும் போதுதான் முன்பு தேடிய பொருள் கிடைக்கும்.
சிலர் வீடு பூரா ஜல்லடை போட்டு தேடினாலும் தேடும் பொருளே கிடைக்காது. இன்னும் சிலருக்கு கைக்கு ஒரு கண் வைக்கணும் போலயே என்ற சொல்லும் அளவுக்கு கண்ணெதிரில் இருந்தாலும் தேடி கொண்டே இருப்பார்கள்.

10 ஆண்டுகள்
கடந்த 10 ஆண்டுகளுக்கு நடந்த ஒரு விலை மதிப்பில்லாத பொருள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட சம்பவத்தை பார்ப்போம். மேரிலாந்தில் பெக்கி பெக்மேன் என்பவர் தனது ஐபோனை 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012 ஆம் ஆண்டு தொலைத்து விட்டார். வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை.

புதிய ஐபோன்
கொஞ்ச நாட்களுக்கு தேடிய பெக்கி, வெறுத்து போய் புதிய ஐபோனை வாங்கிக் கொண்டார். இந்த நிலையில் அவர்களது வீட்டு கழிவறையில் தண்ணீரை ஃபிளஷ் செய்த பின்னர் ஏதோ கலகலவென சப்தம் கேட்டுள்ளது. இதே போல் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்தும் போதெல்லாம் ஏதோ அதிரும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.

கழிவறையில் சப்தம்
கழிவறை பழையதாக இருந்ததாலும் கட்டுமான பணிகளை சரி வர செய்யாததாலும் இது போல் சப்தம் கேட்டிருக்கும் என பெக்கியும் அவரது கணவரும் நினைத்துக் கொண்டனர். அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை நகர்த்த பெக்கியின் கணவர் முடிவு செய்தார். அது போல் அவர் செய்த போது அவருக்கு ஆச்சரியம்.

டாய்லெட்டுக்குள் கிடைத்த ஐபோன்
டாய்லெட்டுக்குள் பெக்கி தொலைத்த ஐபோன் கிடைத்தது. உடனே ஓடி போய் பெக்கியிடம் அவரது கணவர் தெரிவித்தார். இதை நம்பாமல் பெக்கியும் கழிவறைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு அவர் தொலைத்த ஐபோன் கிடைத்தது. ஐபோனை எடுத்தனர். அதன் பின்புறம் பார்த்த போது திறந்திருந்தது. ஓபன் செய்து உள்புறம் பார்த்தனர். நல்ல வேளையாக ஐபோன் நல்ல கண்டிஷனில் இருந்தது. இதனால் பெக்கி மகிழ்ச்சி அடைந்தார். டாய்லெட் பைப்பில் இருந்ததால் போனின் உட்புறம் எதுவும் ஆகாமல் இருந்துவிட்டது. இது தெரியாமல் புதியதாக ஒரு போனை வாங்கிவிட்டோமே என மகிழவும் முடியாமல் வேதனை அடையவும் முடியாமல் இருக்கிறாராம் பெக்கி!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications