என்னா உயரம்! ஸ்டூல் போட்டே இளநீர் பறிப்பாங்க போலயே.. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குடும்பம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரு குடும்பமே உயரமாக இருந்து அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பொதுவாக உயரமாக இருப்பதும் குட்டையாக இருப்பதும் சாதாரணம்தான். இதுவே வரையறையை தாண்டி செல்லும் போது அது பெரிதும் பேசப்படுகிறது. உயரம் என்றால் அமிதாப் பச்சன் போல் 6 அடி உயரம் என வர்ணிப்பது உண்டு.

ஆனால அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே 7 அடியை தாண்டி உயரமாக உள்ளனர். இவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

 அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர்கள் டிராப் குடும்பத்தினர். இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவான்னா, மோலி, மகன் ஆடம் டிராப் என 5 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

டென்னிஸ் மைதானம்

டென்னிஸ் மைதானம்

இவர்களின் சராசரி உயரம் டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமமாக இருக்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த குடும்பத்தினரின் சராசரி உயரம் 203.29 சென்டிமீட்டர். அதாவது 6 அடி 8 அங்குலமாகும். இவர்கள்தான் உலகிலேயே மிகவும் உயரமான குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள்.

விளையாட்டு

விளையாட்டு

இந்த குடும்பத்தில் ஆடம் டிராப் 7 அடி 3 அங்குலம் உயரத்துடனும் மோலி 6 அடி 6 அங்குலமும் , ஸ்காட்டின் உயரம் 6 அடி 8 அங்குலமும் சவன்னாவின் உயரம் 6 அடி 2 அங்குலமும் தாய் கிறிஸ்ஸியின் உயரம் 6 அடி 3 அங்குலமும், ஸ்காட்டின் உயரம் 6 அடி 8 அங்குலமும் உள்ளது. இவர்களில் மகள்களும் மகனும் கல்லூரிகளில் கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் வீட்டின் மேற்கூரையை கைகளால் தொட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இளநீர் வேண்டுமானால் இவர்கள் ஸ்டூல் போட்டு ஏறி பறித்துவிடுவார்கள் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+