என்ன சோனமுத்தா எப்படி இருக்க.. புலியை சுரண்டி பார்த்த நாய்.. அப்புறம் தான் ட்விஸ்ட்.. பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புலியை வீண் வம்புக்கு இழுக்கும் வகையில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்று அதன் காதை கடித்து சண்டைபோடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

பொதுவாக வனவிலங்குகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம். வனவிலங்குகள் செய்யும் குட்டி சேட்டைகள் போன்றவை பார்க்க ரசிக்கும் படி இருக்கும்.

ஒருசில நேரங்களில் விலங்குகள் சண்டை போடுவது ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஒருசில நேரம் செல்லமாக சண்டையிடுவது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

தீயாக பரவும் வீடியோ

தீயாக பரவும் வீடியோ

காட்டில் தான் அப்படி என்றால் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளும் ஒன்றுக்கொன்று போட்டா போட்டி போடுவது ரசிக்கும் படி இருக்கும். அந்த வகையில் சும்மா இருக்கும் புலியை சுரண்டி பார்ப்பது போல, நாய் ஒன்று புலியை தாக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சில விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ இதுவரை 4.6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

புலியை கவ்விக்கொண்ட நாய்

புலியை கவ்விக்கொண்ட நாய்

அந்த வீடியோவில், புலியும் சிங்கமும் எதிரெதிரே இருக்கிறது. அப்போது அங்கு கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்று குறுக்காக செல்கிறது. அந்த நாய் என்ன நினைத்ததோ தெரியவில்லை திடீரென.. சிவனேன்னு இருந்த புலியின் காது பகுதியை கவ்விக்கொண்டது. காது பகுதியை வசமாக கடித்துக்கொண்டதால் புலியால் நகர முடியவில்லை.. சிறிது நேரத்தில் நாய் விட்டு விடும் என்று புலி எதிர்பார்க்கும் நிலையில்.. நாய் தொடர்ந்து புலியை விடாமல் கவ்விக்கொள்கிறது.

18 ஆயிரம் லைக்

18 ஆயிரம் லைக்

இதனால் ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த புலி தன் முன்னங்கால்களால் நாயை விரட்ட முயற்சிக்கிறது. அப்பவும் நாய் விடாமல் இருந்ததால் புலி நாயை அலேக்காக தூக்கி சாய்க்கிறது போன்று வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அனிமல்ஸ் பவர் என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

பிடியை விட்ட தருணம்

பிடியை விட்ட தருணம்

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், 'நாய்க்கு ஒரு அழகான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி அந்த நாய் புலியை விடாமல் பிடித்துக்கொண்டுள்ளது. ஆனால் அந்த நாய் பிடியை விட்ட மறு நொடி அதன் கதை முடிந்துவிடும்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், 'என் மனைவி அதிரடியில் இறங்கி விட்டார்' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் இந்த வீடியோ குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+