'நான் தான் ரியல் ஜான் சீனா'.. இளைஞரை பாய்ந்து சென்று தாக்கிய குரங்கு.. டிரண்ட் ஆகும் வீடியோ!
வாஷிங்டன்: டபிள்யூ டபிள்யூ ஈ வீரர்கள் போல குரங்கு ஒன்று வாலிபரை பாய்ந்து சென்று தாக்கும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
விலங்குகள் பொதுவாக மனிதனை துன்புறுத்தும் எண்ணங்களை கொண்டது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே விலங்குகள் இருக்கும்.
மனிதர்கள் அதை வலிய போய் துன்புறுத்தாத வரை விலங்குகள் எதுவும் தானாக எந்த தொல்லையும் செய்யாது. இதை டிஸ்கவரி சேனல்களில் கூட பார்த்து இருக்கலாம்.

தொந்தரவு செய்யாத வரை
வனப்பகுதிகளில் கூட சில நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது கண்ணில் தென்படும் புலி உள்ளிட்ட விலங்குகள் கூட நாம் எந்த தொந்தரவு செய்யாத வரை அதுவாகவே சென்று விடும். மாறாக ஹார்ன் அடிப்பது செல்பி எடுப்பது என விலங்குகளை அச்சுறுத்துவது போல் மனிதர்கள் நடந்து கொள்வதாலேயே விலங்குகள் கோபம் அடைந்து மனிதர்களை தாக்க வரும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தரப்பில் சொல்லப்படும் கருத்தாக உள்ளது.

குரங்கு சேட்டை
ஆனால், விலங்குகளில் சற்று வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டது குரங்கு. பிற விலங்குகளை விட மனிதர்களை பார்த்து அப்படியே பிரதிபலித்து செய்யும் பழக்க வழக்கங்களை கொண்ட குரங்கு சேட்டைகள் செய்வதிலும் கில்லாடி. அதிகமாக சேட்டை செய்பவர்களைக் கூட நாம் ஏண்டா.. குரங்கு மாதிரி சேட்டை செய்து கொண்டு இருக்கிறாய் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு குரங்குகள் சில சமயங்களில் பாடாய் படுத்தும்.

சிங்கத்திடம் வம்பு செய்யும் குரங்கு
ஏன் வனத்தில் கூட பிற விலங்குகளிடம் தனது சேட்டையை காட்டி விட்டு தலைதெறிக்க ஓடும் காட்சிகளை கூட அடிக்கடி இணையத்தில் நாம் பார்த்து இருக்கக் கூடும். குறிப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிங்கத்திடம் வம்பு செய்யும் குரங்கு, பிறகு சிங்கம் கர்ஜித்ததும் மரத்தில் தாவும் வீடியோ ஒன்று கூட சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி இருந்தது. இப்படி வீண் வம்புக்கு விலங்குகளிடம் மட்டும் அல்ல... அவ்வப்போது மனிதர்களிடத்திலும் குரங்குகள் வீண் வம்பில் ஈடுபடும்.

ட்விட்டரில் டிரண்ட் ஆகும் வீடியோ
குற்றாலம் போன்ற குரங்குகள் அதிகம் உள்ள இடங்களில் அது செய்யும் அட்டகாசங்களை பலரும் பார்த்து ரசித்து இருக்கக்கூடும். இந்த நிலையில், தற்போது இணையத்தில் குரங்கு ஒன்று தன்னை கல்லால் தாக்க வரும் நபர் ஒருவை தாக்கி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை ட்விட்டரில் Ghar Ke Kalesh- என்பவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இளைஞர் மீது பாயும் குரங்கு
இந்த வீடியோவில் வீட்டின் மாடி வழியாக கேட் பகுதியில் அமர்ந்து இருக்கும் குரங்கு ஒன்றை துரத்த முயற்சிக்கிறார். வெறும் கையை அடிப்பது போல முதலில் ஓங்குகிறார். பின்னர் தரையில் கிடந்த கல்லை எடுத்து அடிக்கலாம் என்று எண்ணத்தில் கல்லை எடுப்பதற்காக குனிகிறார். அடுத்த நொடியோ அந்த இளைஞர் மீது பாயும் குரங்கு அவரை இழுத்து கீழே போட்டுவிட்டு தப்பி ஓடுகிறது. இந்த வீடியோதான் தற்போது வேகமாக பரவி வருகிறது.

WWE ஜான் சீனா போல
நெட்டிசன்கள் பலரும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் ஜன்னல் வழியாக WWE பார்த்து விட்டு குரங்கு வந்துவிட்டது போல் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல், ஜான் சீனா போல பாய்ந்து அடித்துவிட்டது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications