சொல்ல சொல்ல கேட்காத விமானிகள்.. டிரம்ப் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானம்.. தப்பியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலோனியா டிரம்புடன் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு பறந்து சென்றார். அப்போது அவரது விமானத்தை நோக்கி பயணிகள் விமானம் பறந்து வந்தது. இதுபற்றி அறிந்த நியூயார்க் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணிகள் விமானத்துக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் விமானி்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் டென்ஷன் எகிறியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக வாஷிங்டனில் இருந்து பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அரசு முறை பயணமாக டிரம்ப் பிரிட்டன் சென்றார். டிரம்புடன் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் சென்றார். இருவருக்கும் பிரிட்டனில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

donald trump air force one

இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு டொனால்ட் டிரம்ப் பயணித்தபோது வானில் பறந்த அவரது ஏர்போர்ஸ் ஒன் விமானமும், இன்னொரு விமானமும் நெருக்கமாக பறந்த தகவல் வெளியானது.

நியூயார்க் வான்வெளி பரப்பில் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்தார். இந்த விமானம் லாங்க் ஐலேண்டுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்துக்கு இணையாக இன்னொரு விமானமும் பறந்து வந்தது. ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரிட் விமானம் 1,300 என்பது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெல் பகுதியில் இருந்து பாஸ்டனுக்கு பறந்து சென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் டிரம்பின் ஏர் போர்ஸ் ஒன்- விமானத்துக்கு இணையாக பறந்தது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை நெருங்கலாம் என்று கட்டுப்பாட்டு அறை நினைத்தது. இது நடந்தால் ஆபத்து ஏற்படலாம். இதனால் சுதாரித்த நியூயார்க் டவர் விமான கட்டுப்பாட்டு மையம் உடனடியாக ஸ்பிரிட் 1,300 விமானத்தின் விமானிகளை தொடர்பு கொண்டது. ‛‛கவனமாக கவனியுங்கள்.. ஸ்பிரிட் 1300 விமானத்தை 20 டிகிரி கோணத்தில் வலதுபுரம் திரும்புங்கள்'' என்று மெசேஜ் அளிக்கப்பட்டது.

ஆனால் பைலட்டுகள் உடனடியாக பதிலளிக்கவில்லை. கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் டென்ஷனாகினர். ‛‛ஸ்பிரிட் 1300 20 டிகிரி கோணத்தில் ரைட் சைடு திரும்புங்கள்'' என்று மீண்டும் அழுத்தி கூறினர். ஆனாலும் கேட்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள், ‛‛வெள்ளை மற்றும் நீல 747 ரக விமானம் (டிரம்பின் ஏர் போர்ஸ் விமானம்) அருகே உள்ளது'' என்று கூறினர்.

அப்போதும் கேட்காததால் கோபமான கட்டுப்பாட்டு அறையினர், ‛‛ஒவ்வொன்றையும் இரண்டு முறை சொல்ல வேண்டுமா? கவனமாக கேளுங்கள். Get off the iPad'' என்று காட்டமாக திட்டினர். இருப்பினும் இருவிமானங்களுக்கும் இடையே அதிகப்படியான மைல் இடைவெளி இருந்ததால் எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. இருவிமானங்களும் பத்திரமாக தரையிறங்கியது. ஆனாலும் இந்த சம்பவம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை டென்ஷனாக்கியது.

இந்த டென்ஷனுக்கு முக்கிய காரணம் உள்ளது. இதுதொடர்பாக Flightradar24 எனும் விமான கண்காணிப்பு தளம் வெளியிட்ட தரவின்படி பார்த்தால், ‛‛ ஸ்பிரிட் ஏர்பஸ் மற்றும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் ஆகியவை 8 முதல் 11 மைல் தொலைவில் வானில் இணையாக பறந்தன. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக பாதுகாப்பு அம்சங்களின் படி பார்த்தால் நியூயார்க் வான்வெளியில் இந்த விமானங்கள் இடையே இன்னும் 1.5 மைல் மற்றும் 500 அடி veritcal separation இருந்திருக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛நாங்கள் எப்போதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் 1,300 (FLL-BOS) பாஸ்டனுக்கு செல்லும் வழியில் வழக்கமான நடைமுறை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளை பின்பற்றி தரையிறங்கியது'' என்று தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னர் சார்லஸ் III மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+