ஒரு வாரம் நான்ஸ்டாப் அழுகை.. கடைசியில் கண்ணீரில் முடிந்த கின்னஸ் சாதனை முயற்சி.. என்னாச்சு ?
வாஷிங்டன்: வித்தியாசமாக எதையாவது செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதுபோலத்தான் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் ஒருவாரம் தொடர்ந்து அழும் சாதனையை முயற்சித்து இருக்கிறார். அவரது சாதனை முயற்சி கடைசியில் எப்படி முடிந்தது என்று பார்ப்போம்.
வித்தியாசமாக எதையாவது செய்து உலக சாதனை படைத்தவர்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதற்காக பிற நபர்கள் செய்து வைத்து இருக்கும் சாதனையை முறியடிக்க முயற்சிப்பதோடு, புதிதாக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், உலக சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று நைஜீரியாவை சேர்ந்த தெம்பு எபேரே என்பவர் வித்தியாசமாக ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

அதாவது தொடர்ந்து ஒருவார காலம் இடை விடாது அழுது இருக்கிறார். நான் ஸ்டாப்பாக ஒரு வாரம் கண்ணீர் விட்டு சாதனை முயற்சியை மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு கடுமையான தலைவலி வந்து இருக்கிறது. அது மட்டும் இன்றி முகம் முழுக்க வீங்கியதோடு, கண்களும் வீங்கி விட்டன. ஒரு கட்டத்தில் தனது பார்வையையும் இழந்து விட்டாராம். அதாவது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கண் பார்வையையும் இழந்து இருக்கிறார்.
ஆனால், கின்னஸ் உலக சாதனைக்கு தனது சாதனை முயற்சி பற்றி அவர் தகவல் தெரிவிக்காததால் இந்த சாதனை பதிவு செய்யப்படவில்லை. எனினும் இந்த சாதனை படைப்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெம்பு எபேரே தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இது போன்ற வித்தியாசமான சாதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்பாக கடந்த மே மாதம் ஹில்டா பாசி என்பவர், 100 மணி நேரம் தொடர்ச்சியாக சமையல் செய்யும் சாதனை முயற்சியை மேற்கொண்டார். அந்த நாட்டின் பிரபலங்கள், ஏன் துணை அதிபர் கூட அவரை உற்சாகப்படுத்தினார். கின்னஸ் உலக சாதனை வெப்சைட் இரண்டு நாட்கள் முடங்கும் அளவுக்கு அதிக ஆர்வத்தை நைஜீரியர்கள் காட்டியிருந்தனர். எனினும், 93 மணி நேரம் 11 நிமிடங்கள் தொடர்ந்து அவரால் சமையல் செய்ய முடிந்தது. இந்தியா வைத்து இருந்த முந்தைய சாதனையை இதன் மூலம் ஹில்டா பாசி முறியடித்தார்.
அதேபோல், கிளாசிக் இலக்கியத்தை சத்தமாக 140 மணி நேரம் படிக்கும் சாதனை முயற்சியையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜான் ஒபோட் என்பவர் முயற்சித்தார். தனது சாதனையை அர்த்தம் உள்ளதாக்கும் வகையில் இந்த இலக்கியத்தை படிக்கும் முயற்சி மேற்கொண்டதாக கூறினார். இதுபோல ஆப்பிரிக்க நாடுகளில் பல வித்தியாசமான சாதனை முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications