காசு பணத்தை விட ஆபாச படங்களுக்கு அதிகம் அடிமையாகும் இளைஞர்கள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கேமிங் அல்லது சூதாட்டத்தை விட ஆபாசப் படங்களும் உடலுறவும் சராசரி ஆண்களை எளிதாக அடிமையாக்குவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதாவது ஆபாசப் படங்கள் மற்றும் உடலுறவு ஆண்களுக்கு அதிக உற்சாகத்தையும் இனிமையையும் தந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நவீன உலகில் எல்லாமே இணைய மாயமாகி வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது அனைத்துமே இணையத்தில் தான் இருக்கிறது. ஒரு இரண்டு கிளிக் செய்தால் எல்லாமே நமது வீட்டிற்கே வந்துவிடுகிறது.

offbeat health

இதனால் பலரது வாழ்க்கை மொத்தமாக மாறி இருக்கிறது. முன்பு நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத பல விஷயங்களை இந்த இணையம் தான் சாத்தியப்படுத்தி இருக்கிறது..

ஆபாசப் படங்கள்: அதேநேரம் இந்த இணையத்தால் எல்லாமே நன்மைகள் மட்டும் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இணையம் என்பது இரண்டு பக்க கத்தி மாதிரி தான். இதனால் ஆபத்துகளும் கூட அதிகம் இருக்கவே செய்கிறது. இணையத்தைப் பொறுத்தவரை ஆபாசப் படங்கள் தான் பெரிய பிரச்சினை. பெரியளவில் கட்டுப்பாடுகள் இருக்காது என்பதால் மைனர்களும் கூட ஆபாசப் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போகிறார்கள். இதனால் சில குற்றங்களும் கூட நடக்கிறது.

அதேபோல சூதாட்டம் என்பதும் இணையத்தில் மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சூதாடுவதால் லட்சக்கணக்கில் கூட பலரும் இழந்துவிடுகிறார்கள். விட்டதைப் பிடிக்கிறேன்.. விட்டதைப் பிடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் சேமிப்பை காலி செய்து கடனிலும் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆய்வு: இதற்கிடையே இணையத்தில் ஆபாசப் படங்கள், சூதாட்டம் மற்றும் வீடியோ கேம்கள் ஆகியவற்றில் எது ஆண்களை அதிகம் அடிமைப்படுத்துகிறது என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. 19 முதல் 38 வயதான 31 வயதான ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் கீழ் அந்த ஆண்களுக்கு ஆபாசப் படங்கள், வீடியோ கேம் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் பணத்தின் படங்கள் காட்டப்பட்டன.

அதில் எதாவது ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை தேர்வு செய்யும் போது வெகுமதியாகப் பணம் கிடைக்கும் என்பது போல ஆய்வை நடத்தியுள்ளனர். அதாவது இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தேர்வு செய்யும் போது மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதை எம்ஆர்ஐ ஸ்கேனரில் வைத்து ஆய்வு செய்துள்ளனர்..

"DINK.." அமெரிக்கா முதல் ஜப்பான் வரை.. உலக நாடுகளுக்கு எமனாக நிற்கும் டிரெண்ட்.. தடுக்கவே முடியல!


ஆபாசப் படங்கள்: அதில் ஆபாசப் படங்கள், கேமிங் அல்லது பணத்தைத் தேர்வு செய்யும் போது நமது மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆய்வாகச் செய்துள்ளனர். சுமார் 68 முறை இதே ஆய்வை திரும்பத் திரும்பச் செய்துள்ளனர்.

offbeat health

திருப்தி: அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைத் தேர்வு செய்துள்ளனர். அப்போது அவர்கள் மூளை எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதையும் பதிவு செய்துள்ளனர். அதில் கேமிங் அல்லது பணத்தைத் தேர்வு செய்வதைக் காட்டிலும் ஆபாசப் படங்களைத் தேர்வு செய்யும் போது மூளை அதிகம் திருப்திப்படுகிறதாம். அதிகம் மகிழ்ச்சியாக உணர்கிறதாம். இதை அவர்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

அதாவது ஆபாசப் படங்களுக்கு நாம் அடிமையாகாவிட்டாலும், மூளையில் இதில் சென்று லாக் ஆகிவிடுவதால், இவற்றைச் செய்வதை நிறுத்துவது கடினமாகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+